தேவனுடைய கிரியைகள் என்ன? What is the Works of God? 59-04-04 Los Angeles California U.S.A. நன்றி, கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. 2. நீங்கள் இங்கே அமர்ந்துகொண்டு, நமது சகோதரன் பரிசுத்த ஆவியானவரின் கிரியைகளைப்பற்றி பேசுவதைக் கேட்டு மகிழ்ந்து கொண்டிருந்ததைப் போலவே, நானும் அங்கே பின்னால் அமர்ந்துகொண்டு, அந்த செய்தியை கேட்டு மகிழ்ந்து கொண்டிருந்தேன். நான் அதைப்பற்றி கேட்க விரும்புகிறேன். அதைத்தான் நான் விசுவாசிக்கிறேன். 3. நாளை ஜெப அட்டைகளை வழங்கப் போவதாக அவர் அறிவித்ததை நான் கேட்டேன். அது நாளை மாலை சுமார் ஆறு மணியிலிருந்து ஏழு மணிக்குள்ளிருக்கும், நாங்கள் ஜனங்களை வரிசை கிரமத்தில் ஒவ்வொருவராக நிற்க வைக்கும்படியாக, ஜெபம் செய்ய விரும்புபவர்கள் வந்து ஜெப அட்டையை வாங்கிக் கொள்ளலாம். அது ஏதோ ஒன்றை செய்கிறது, ஒரு - ஒரு நபருக்கு, அவர்கள் தொடும்படியாக ஏதோவொன்று, ஒரு ஜெப அட்டை கிடைக்கப்பெறும்போதே, அவர்கள் அந்த அட்டையை கையில் பிடித்த மாத்திரத்திலேயே, அவர்கள் ஏறக்குறைய எண்பது சதவிகிதம் அந்நேரமே சுகமடைந்ததாக நான் கருதுகிறேன். 4. சகோதரன் பாஸ்வர்த் (Bosworth) அதை ஒரு முறை என்னிடம் கூறினார். அவர் கூறினதாவது... அவர் எனக்காக அட்டைகளைக் கொடுத்துக் கொண்டிருந்தார். ஒரு ஊழியக்காரன் ஏராளமான சிநேகிதரைப் பெற்றுள்ளவனாய் இருப்பதனால், அதைச் செய்வது அவனுக்கு மிகவும் கடினமானதென்று உங்களுக்குத் தெரியும். மேலும் அவர் - அவர் "நீங்கள் அவர்களுக்கு ஒரு அட்டையைக் கொடுக்கும்போது, அவன் அந்நேரமே, எண்பது சதவிகிதம் சுகமாகிறான். அவன் அந்த அட்டையை பற்றிப் பிடித்த மாத்திரத்தில் அவன் (சுகமடைதலின் - தமிழாக்கியோன்) முன்னேற்றப்பாதையில் இருக்கிறான்" என்றார். 5. அது எனக்கு ஒருமுறை நடந்ததை நினைப்பூட்டுகிறது, அது ஜார்ஜியாவில் நடந்ததென்று நான் நம்புகிறேன். ஒரு ஸ்திரீ இருந்தாள். அரங்கத்தில் கூட்டம் அதிகமாக இருந்தது. சரியாக தெற்கத்திய தாய் போன்றே இருந்த ஒரு ஸ்திரீ முன் இருக்கையில் அமர்ந்திருந்தாள். கையில் ஒரு சிறு குழந்தையுடன் நடந்து கொண்டிருந்த ஒரு ஸ்திரீயின் மீது அவள் இரக்கப்பட்டாள். மேலும் அங்கே... நிற்பதற்குக் கூட இடமில்லாதிருந்தது. அதனால்தான் அந்த ஸ்திரீயின் மீது பரிதாபம் ஏற்பட்டதாக அவள் நினைத்தாள். எனவே... பரிசுத்த ஆவியானவர் அவளிடம், "போய், அந்தக் குழந்தைக்காக ஜெபம் செய்" என்று சொன்னதாக அவள் கூறினாள். 6. அதற்கு அவள், "ஓ", என்னுடன் பேசினது அது எதுவாக இருந்தாலும், "நான் அந்தக் குழந்தைக்காக ஜெபம் செய்ய மாட்டேன். அந்த தாய் அவள் சற்றுமுன் பெற்ற ஜெப அட்டையை வைத்திருக்கிறாள். இன்றிரவு அது ஜெப வரிசையில் அழைக்கப் பட்டால் சகோதரன் பிரன்ஹாம் அந்தக் குழந்தைக்காக ஜெபிப்பார்" என்று பதிலளித்தாள். மேலும், "நான் - நான் போய் ஒருபோதும் அந்தக் குழந்தைக்காக ஜெபிக்க மாட்டேன்" என்று கூறினாள். பரிசுத்த ஆவியானவரோ, "போய் அந்தக் குழந்தைக்காக ஜெபம் செய்!" என்றார். 7. அந்த குற்ற உணர்ச்சியிலிருந்து அவளால் விடுபட முடியாத அளவிற்கு, அது அவளது இருதயத்தில் மிக உறுதியாக இருந்தது. எனவே சிறிது நேரம் கழித்து, அவள், "நல்லது, அவள் குழந்தையுடன் அமரும்படியாக, நான் அந்த ஸ்திரீக்கு என் இருக்கையை கொடுப்பேன், மேலும் அது ஒருவேளை என் சிந்தையிலிருந்து அதை அகற்ற எனக்கு ஒரு வாய்ப்பை அளிக்கும்" என்று நினைத்தாள். 8. மேலும் அப்படியாக... உங்களுக்குத் தெரியுமா, பரிசுத்த ஆவியானவர் என்ன செய்ய சொல்கிறாரோ அதற்குக் கீழ்ப்படிவது எப்போதுமே மிகச்சிறந்தது. எதிர்த்து பேசாதேயுங்கள், கீழ்ப்படிய மாத்திரம் செய்யுங்கள். ஏன் என்று ஒருவேளை உங்களுக்கு விளங்காமல் இருக்கலாம், ஆனால் எப்படியானாலும் அதைச் செய்யுங்கள். அது பரிசுத்த ஆவியாகயிருக்கும் பட்சத்தில், தேவன் எப்போதுமே சரியாகவே இருக்கிறார். 9. அதன்பிறகு, அந்த ஸ்திரீ மீண்டும் கடந்து சென்றபோது, அவள் எழுந்து, "சகோதரியே, என்னை மன்னியும்" என்றாள். "நீ வியாதிப்பட்ட குழந்தையை வைத்திருப்பதை நான் காண்கிறேன்" என்றாள். 10. அதற்கு அவள், "ஆமாம், அது - அது மிக மோசமாக உள்ளது." அது ஏதோவொன்று, அந்நேரத்தில் என்ன கோளாறு இருந்ததென்பதை இப்பொழுது நான் மறந்துவிட்டேன். அவள், "அது மிகவும் சுகவீனமாயுள்ளது" என்றாள். மேலும், "ஒருவேளை சகோதரன் பிரன்ஹாம் அதற்காக ஜெபிக்கக்கூடும் என்பதற்காக நாங்கள் அந்தக் குழந்தையை கொண்டு வந்திருக்கிறோம்" என்றாள். "நீ ஒரு ஜெப அட்டையை வைத்திருப்பதை நான் காண்கிறேன்" என்றாள். அவள், "ஆமாம், அது இன்றிரவு ஜெப வரிசையில் அழைக்கப்படும் என்று நான் நம்புகிறேன்" என்றாள். 11. அவள், "தேனே, நீ ஒரு கிறிஸ்தவள் என்பதைக் காண்கிறேன், ஆகையால், பரிசுத்த ஆவியானவர் என் மீது வைத்திருக்கும் ஒரு பாரத்திலிருந்து என் ஆத்துமாவை விடுவிக்க ஒரு சந்தர்ப்பத்தை எனக்குத் தருவாயா?" என்று கேட்டாள். அவள், "அவ்விதமே செய். அது என்ன?" என்று கேட்டாள். 12. "பரிசுத்த ஆவியானவர் அந்தக் குழந்தைக்காக நான் ஜெபிக்கும்படி விரும்புகிறார்" என்று கூறினாள். "அதை என் சிந்தையிலிருந்து அகற்ற நான் ஜெபம் செய்யலாமா?" என்று கேட்டாள். "சுமார் அரை மணி நேரமாகவே உன்னை கவனித்துக் கொண்டிருக்கிறேன்" என்றாள். "நீ என்னை அவ்வாறு செய்ய அனுமதித்தால், நான் இங்கே இருக்கின்ற என் இருக்கையை உனக்குத் தருவேன்" என்றாள். அதற்கு அவள், "பிரியமானவளே, நீ எனக்கு இருக்கை கொடுக்க வேண்டியதில்லை" என்று கூறி, "நிச்சயமாகவே, குழந்தைக்காக ஜெபம் செய்" என்றாள். 13. அந்தத் தாய் அந்தச் சிறு குழந்தையின் மீது தன் கைகளை வைத்து, சில வார்த்தைகளில் எளிமையான ஜெபத்தை ஏறெடுத்தாள். மேலும் அவளுக்கு தன்னுடைய இருக்கையை கொடுத்துவிட்டு, அவள் மாடி முகப்பிற்கு (balcony) சென்றாள், ஓ, அது இதுபோன்று, சுமார் இரண்டு, மூன்று மாடி முகப்புகள் உயரமாக இருக்கலாம். அங்கே ஒரு கனவான் அந்த ஸ்திரீயைக் கண்டு, "இந்த இருக்கையை எடுத்துக் கொள்" என்றார். 14. அதன்பின் சுமார் ஐந்து, பத்து நிமிடங்களுக்கு பிறகு, நான் உள்ளே வந்து சற்று நேரம் பேசினேன். "நாம் இப்போது ஜெப அட்டைகளை அழைப்போம்" என்றேன். "இப்பொழுது, நேற்றிரவு, நாம் ஒரு குறிப்பிட்ட வரிசையில் அழைத்தோம். இன்றிரவு வேறொரு வரிசையில் அழைப்போம்" என்றேன். உங்களில் பெரும்பாலானோர் கூட்டத்தைப் பற்றி அறிந்திருப்பீர்கள், அது எங்கிருந்து தொடங்க வேண்டு மென்று கர்த்தர் என் சிந்தையில் வைத்தாரோ, அங்கிருந்துதான் நான் அழைத்தேன். 15. அந்த தாய் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தாள், ஏனென்றால் அவளுடைய குழந்தை வரிசையில் ஏறத்தாழ இரண்டாவது அல்லது மூன்றாவது இடத்தில் இருந்தது. எனவே அவள் ஜெபிக்கும்படியாக மேடைக்கு முன்பாக வருகையில்... நிச்சயமாக, நான் அதை அறிந்துகொள்ளும் ஒரே வழி பதிவு செய்யப்பட்ட ஒலிநாடாவிலிருந்து மட்டும்தான் (புரிகிறதா?), ஏனென்றால் அது ஒரு தரிசனம். அது முடிந்த பிறகு, அதாவது, நான் அதை அப்படியாகத்தான் புரிந்துகொள்கிறேன். பின்னர் பரிசுத்த ஆவியானவர் அந்த ஸ்திரீயிடம், அவள் யார் என்று அவளிடம் கூறி, "ஒரு குறிப்பிட்ட காரணத்திற்காக உன் குழந்தையைக் கொண்டு வந்திருக்கிறாய்" என்று கூறினார். அது சரிதான் என்று அவள் சொன்னாள். ஆனால், "குழந்தை ஏற்கனவே சுகமாகிவிட்டது. ஆசீர்வாதம் குழந்தையின் மீதுள்ளது. அங்கே குறிப்பிட்ட வருண தலை மயிரைக்கொண்ட ஒரு ஸ்திரீ, சிறு கட்டம் போட்ட ஆடை அணிந்து கொண்டு இருக்கிறாள். அது அவள்தான் அங்கே, மாடி முகப்பில் அமர்ந்து கொண்டு இருக்கிறாள். கர்த்தர் குழந்தையை சொஸ்தமாக்கினார்" என்றேன். 16. பரிசுத்த ஆவியானவர் எவ்வாறு கிரியை செய்கிறார் என்று உங்களுக்கு புரிகிறதா? நான் சுவிசேஷகனாக இருப்பதால், ஓ, நான் சுகப்படுத்தும் வல்லமையை பெற்றிருக்கிற காரணத்தினால் அது நானாகத்தான் இருக்க வேண்டுமென அந்த ஸ்திரீ நினைத்தாள். ஆனால், பாருங்கள், அந்த தாயைப்போல் என்னால் அந்தக் குழந்தையின் மீது பரிவு கொண்டிருக்க முடியாது. பரிசுத்த ஆவி அந்தக் குழந்தைக்காக ஜெபிக்க என்னைத் தெரிந்து கொள்ளவில்லை, அது அந்த குழந்தைக்காக ஜெபிக்க அந்த ஸ்திரீயை தெரிந்து கொண்டது. மேலும் தேவன் அதை கனப்படுத்தி அந்தக் குழந்தையை சுகமாக்கினார், அது முற்றிலும் சுகமானது. அதன் சாட்சியை நாங்கள் கிடைக்கப்பெற்றோம். புரிகிறதா, கீழ்ப்படிவது அதற்கான பலனைக் கொடுக்கிறது. ஆவியானவர் என்ன செய்யச் சொல்கிறாரோ, அதை விரைவாக செய்யுங்கள். 17. இப்பொழுது இன்றிரவு, இன்னும் ஜெப அட்டைகளை கொடுக்கவில்லை என்று சகோதரன் டுப்ளெசிஸ் (duPlessis) கூறியதை கேட்டேன். ஆனால்... நாம் ஆராதனையை தொடங்கும் போது நீங்கள் என்ன செய்ய வேண்டுமென்றும், அது எதைப்பற்றியதென்றும் அறிந்து கொள்ளும்படியாக அதில் சிலவற்றை நான் விளக்கலாம் என்றிருக்கிறேன். அதற்கு முன், என்னுடைய ஆராதனையின் பாகத்திற்காக, நான் கடிகாரத்தை கவனிக்க போகிறேன், நான் உங்களை வெகு நேரம் வைத்திருக்கமாட்டேன். ஜெபத்திற்காக ஒரு கணம் நாம் தலைகளை தாழ்த்துவோம். 18. கர்த்தாவே, உம்முடைய குமாரனாகிய கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே நாங்கள் வருவதற்கு எங்களுக்கு கிடைத்திருக்கும் சிலாக்கியத்திற்காக உமக்கு நன்றியுள்ள வர்களாயிருக்கிறோம். ஏனெனில் அவர் "என் நாமத்தினாலே பிதாவினிடத்தில் எதைக் கேட்டாலும் அதை நான் செய்வேன்" என்று சொன்னதினிமித்தம், எங்கள் ஜெபங்களை நீர் கேட்கிறீர் என்பதில் நாங்கள் நிச்சயம் உள்ளவர்களாயிருக்கிறோம். கர்த்தாவே, அது சத்தியம் என்று நாங்கள் அதை விசுவாசிக்கிறோம். 19. வரவிருக்கும் மகத்தான சுகமளிக்கும் ஆராதனையில் பேசுவதற்கு நீர் இன்றிரவு ஒரு அடித்தளத்தை அமைக்கும்படியாக நாங்கள் ஜெபிக்கிறோம். மருத்துவ உதவிக்கு அப்பாற்பட்டு, மருத்துவர்களால் கைவிடப்பட்ட காசநோய், இருதயக்கோளாறு, புற்றுநோய் போன்றவற்றால் மரித்துக் கொண்டிருக்கும் உம்முடைய அநேக நோயுற்ற பிள்ளைகள், அவர்கள் ஜீவிப்பதற்கான ஒரே வழி உமது கிருபையினுடாக மட்டுமே. கர்த்தாவே, அது அவர்களுக்கு அருளப்படுவதாக. 20. நாங்கள் வார்த்தையை வாசிக்கும்போது எங்களுக்கு உதவி செய்யும். பரிசுத்த ஆவியானவர் அதை எங்கள் இருதயங்களில் ஆழமாக விதைப்பாராக. நாங்கள் அதை இயேசுவின் நாமத்தினால் கேட்கிறோம். ஆமென். 21. நான் இரண்டு பகுதிகளை வாசிக்க விரும்புகிறேன். அவற்றில் ஒன்று வேதத்தில் பரிசுத்த யோவான் 10-ம் அதிகாரம், 14-வது வசனம் என்று நான் நம்புகிறேன், என்னை மன்னிக்கவும், 37-வது வசனம். இயேசு கூறுகிறதாவது: Gß ¤uõÂß Q›ø¯PøÍ {õß ö\´¯õv¸¢uõÀ, }[PÒ GßøÚ Â_Áõ]UP÷Ási¯vÀø". 22. மேலும் பரிசுத்த யோவான் 14:12-ல், இயேசு கூறுகிறதாவது: ö(c)´¯õP÷Á ö(c)´¯õP÷Á {õß E[PÐUSa ö\õÀ3/4Q÷Óß; GßøÚ Â_Áõ]UQÓÁß |õß ö\´QÓ Q›ø¯PøÍz uõÝ(r) ö\´Áõß,... 23. சற்று நேரத்திற்கு நான் பேசுவதன் பேரில் அடித்தளமிட இந்த கேள்வியைக் கேட்க விரும்புகிறேன்: "தேவனுடைய கிரியைகள் என்ன?" அது... அநேக முறை இந்த கேள்விக்கு பதில் அளிக்கப்பட்டிருக்கிறது அதாவது கேட்கப் பட்டிருக்கிறது. தேவனுடைய கிரியைகள் என்ன? தேவனுக்கேற்ற கிரியைகளை நடப்பிக்கும்படி அது என்னவென்று அவர்கள் அறிந்துகொள்ள, தேவனுடைய கிரியைகள் என்னவென்று இயேசுவிடம் கேட்கப்பட்டது என்று நான் நம்புகிறேன். 24. இன்றிரவு, இவ்வுலக சரித்திரம் முடிவடையும் வேளையில், குழப்பத்தில் உள்ள உலகத்தைப் பற்றி, மார்க்க ரீதியாக கூறுவோமானால், தேவனுடைய கிரியைகள் என்னவென்று வேதத்திலிருந்து நாம் அறிந்துகொள்வது நல்லது என்று நான் கண்டிருக்கிறேன். இங்கே காணப்படும் கூட்டத்தினரில் எத்தனை பேர் தேவனுடைய கிரியைகள் என்னவென்று அறிந்து கொள்ள விரும்புகிறீர்கள்? நாம் அறிந்துகொண்டால் நாம் அவற்றை செய்ய முடியும். 25. தேவனுடைய கிரியைகள், அது பல நிலைகளைக் கொண்டுள்ளது என்று நான் மெய்யாகவே விசுவாசிக்கிறேன். சபையானது தேவனுடைய கிரியைகள் என்று நான் விசுவாசிக்கிறேன். மிஷனரி என்பது தேவனுடைய கிரியைகள் என்று நான் விசுவாசிக்கிறேன். சுவிசேஷம் என்பது தேவனுடைய கிரியைகள். எல்லாவற்றிற்கும் மேலாக ஆத்தும இரட்சிப்பு தேவனுடைய கிரியைகள் ஆகும். தெய்வீக சுகமளித்தல் தேவனுடைய கிரியைகள் ஆகும். ஆவியின் வரங்கள் தேவனுடைய கிரியைகள் ஆகும். இது பல்வேறு வழிகளில் பேசப்படலாம். 26. இப்பொழுது, "ஒருநாள் உண்டு அது பகலுமல்ல இரவுமல்ல ஆனாலும் சாயங்காலத்திலே வெளிச்சம் உண்டாகும்" என்று தீர்க்கதரிசி வேதத்தில் கூறியுள்ளதை நாம் அறிய விரும்புகிறோம். "சாயங்கால நேரத்தில் வெளிச்சம்" என்று ஏதோ ஒரு கவிஞன் இயற்றிய ஒரு பாடல் ஒன்று இருந்ததென்று நான் நம்புகிறேன். 27. நாகரீகம் புவியியல் ரீதியாக பயணித்துள்ளது. அது கிழக்கே தொடங்கி இப்போது நாம் மேற்கு கடற்கரையில் இருக்கும் வரைக்குமாக மேற்கே வந்துள்ளது. கர்த்தருக்குச் சித்தமானால், இந்த வரும் வாரத்தில், ஒரு இரவு, "கிழக்கும் மேற்கும் சந்திக்கும்போது" என்பதன் பெயரில் நான் பேச விரும்புகிறேன். நாம் இன்னுமாக தொடர்ந்து சென்றால், நாம் கண்டத்தைச் சுற்றி, உலகைச் சுற்றி வந்து, நாம் மீண்டுமாக கிழக்கு நோக்கிச் செல்வோம். 28. இப்போது, கிழக்கிலே ஒளியின் குமாரனாகிய தேவனுடைய குமாரன் உதித்ததை நாம் காண்கிறோம். அந்த குமாரன் கிறிஸ்தவ காலம் என்று அழைக்கப்படும் இந்த காலத்தினூடாக பயணித்துள்ளார். இப்போது குமாரன் அஸ்தமிக்கிறார் என்று நாம் நம்புகிறோம். உங்களுடைய செய்தித் தாள்களையும் இன்னும் ஏனையவற்றையும், செய்தி ஒளிபரப்பையும் நீங்கள் சற்றே கேட்பீர்களானால், நீங்கள் அதைக் கேட்கிறீர்கள் என்று அறிவேன். நாகரீகம் நம்மை இந்த அணுசக்தி காலம் போன்றவற்றிற்கு கொண்டு வந்திருக்கிறது என்பதை நீங்கள் காண்பீர்கள், நாம் அந்த நாகரீகத்தின் சூரியன் அஸ்தமனமாகிக் கொண்டிருக்கிறதை காணலாம்; சபைக்கு ஒளியான அந்த குமாரன் அஸ்தமனமாகிக் கொண்டிருக்கிறார். 29. இப்போது, சூரியன் கிழக்கு திசை அடிவானத்தில் பிரகாசிக்கத் தொடங்குகிறது, அந்த அதே சூரியன்தான் மேற்கு திசை அடிவானத்தில் அஸ்தமனமாகிறது என்று நான் விசுவாசிக்கிறேன். நாம் சபை நாளாகிய இரண்டாயிரம் வருஷங்களை கொண்டிருந்தோம். இந்த இரண்டாயிரம் வருஷத்தில், பகலுமல்ல இரவுமல்ல என்று தீர்க்கதரிசி சொன்ன விதமாக நாம் அந்த ஒரு நாளை கொண்டிருக்கிறோம். அது ஒரு இருளார்ந்த மந்தாரமான நாளாக இருந்தது. 30. அவர்மேல் விசுவாசம் கொள்வதற்கும், அவரை நமது சொந்த இரட்சகராக ஏற்றுக் கொள்வதற்கும், மகத்தான சபைகள் மற்றும் மகத்தான பள்ளிக்கூடங்களை பெற்றிருப்பதற்கும், மகத்தான ஊழியக்காரர்களை தேவனுடைய ராஜ்யத்திற்கென்று கொண்டு வருவதற்கும், அதிகப்படியான தொண்டு பணியினை செய்ததற்கும் போன்ற கர்த்தருக்காக மகத்தான காரியங்களைச் செய்ய நமக்கு போதுமான வெளிச்சம் இருந்தது. ஆனாலும், நாம் ஆதியில் இருந்ததைப் போன்றதொரு வெளிச்சத்தை சமீப காலம், அதாவது கடந்த முற்பது அல்லது நாற்பது வருஷம் வரைக்குமாக நாம் காணவில்லை. 31. வெளிச்சம் உதித்தது, முதலாம் கிழக்கத்திய சபையில், கிழக்கத்திய ஜனங்களின் மேல் அசைவாடிய அதே பரிசுத்த ஆவியானவர், அதே அசைவாடுதலுடன் அஸ்தமிக்கும் நேரத்தில் மேற்கத்திய ஜனங்களிடம், அதே சுவிசேஷத்தை, சொல்லப் போனால் முழு சுவிசேஷத்தையும், இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலின் வல்லமையின் பரிபூரணத்தையும் கொண்டு வந்துள்ளார். நாம் குமாரனின் அஸ்தமனத்தில் ஜீவித்துக் கொண்டிருக்கிறோம். 32. மேலும் சுவிசேஷ வெளிச்சம், கிழக்கத்திய ஜனங்களின் மீது முதலில் பிரகாசிக்கத் தொடங்கியபோது அது குறைகூறப்பட்டு, கேலி செய்யப்பட்டதைப் போன்றே, அது மேற்கத்திய ஜனங்களின் மீது அஸ்தமனமாகும் போதும் அதே வகையான விமர்சனங்களைப் பெறும். ஆனால், கிழக்கத்திய ஜனங்களை தாமே தம் சரீரத்தில் வந்து ஆசீர்வதித்த அதே இயேசு, மேற்கத்திய ஜனங்களின் மீது பரிசுத்த ஆவியின் ரூபத்தில் அவர்களை ஆசீர்வதித்து வருகிறார். அவர் யூதர்களிடம் பேசுகையில், "இந்தத் தொழுவத்திலுள்ளவை களல்லாமல் வேறே ஆடுகளும் எனக்கு உண்டு" என்று சொன்னார். 33. ஆனால் இப்பொழுது, "இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்" என்று வேதவாக்கியங்களில் எழுதியிருக்கிறதையும் கூட நாம் வாசிக்கிறோம். அது எபிரெயர் 13:8 என்று நான் நம்புகிறேன். அந்த கிறிஸ்து மாறாத வராயிருக்கிறார். அவர் கலிலேயாவில் இருந்த அதே இயேசுவாக இருப்பாரேயானால், மேலும் இங்கே அவர் கலிபோர்னியாவில் பரிசுத்த ஆவியின் ரூபத்தில் இருப்பாரேயானால், அவர் நியமத்தில் (principle) மாறாதவராகவும், வல்லமையில் மாறாதவராகவும், மனப்பான்மையில் மாறாதவராகவும், அதே இயேசுவாக இருந்தாக வேண்டும். அவர் மாறாதவராயிருக்கிறார் என்றால் இயேசு என்று அழைக்கப்படும் குமாரனின் சரீரத்தில் வெளிப்பட்ட தேவன், ஒரு சரீரத்தின் மூலம் தம்மை வெளிப்படுத்திக்காட்டிய அதே விதமாகவே தம்மை ஒரு சபை அல்லது விசுவாசிகளின் குழுவில், கிரியை செய்து கொண்டு, ஆவியின் ரூபத்தில் மாத்திரம் வெளிப்படுத்திக்காட்டுகிறார். 34. அந்நாட்களில், தேவன் தாம் என்னவாயிருந்தார் என்பதை, தம்முடைய குமாரனாகிய இயேசுவில் இருந்து, உலகிற்கு தம்மை வெளிப்படுத்தினார். மேலும் இன்று, அவர்... மரணம், அடக்கம், உயிர்த்தெழுதல் மற்றும் அதை விசுவாசிப்பதன் மூலம் நாம் நீதிமான்களாக்கப்பட்டு, நாம் நம்மை பரிசுத்த ஆவியானவருக்கு ஒப்புக்கொடுக்கும்போது, அவர் பரிசுத்த ஆவியின் மூலம் மனுஷ சரீரத்தில், நம்முடைய சரீரத்தில், அவர் தம்மை நமக்கு வெளிப்படுத்துகிறார். 35. உங்களை எவ்வாறு ஒப்புக்கொடுப்பது என்பதை அறிந்து கொள்ளுவதுதான் இப்போதுள்ள காரியம். மேலும் சில ஜனங்கள் சபையில் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்; சிலர் பிரசங்கத்திற்கு தங்களை ஒப்புக்கொடுக்கலாம், சிலர் போதனைகளுக்கு தங்களை எளிதாக ஒப்புக்கொடுக்க முடியும். சிலர் தீர்க்கதரிசனத்திற்கு தங்களை ஒப்புக்கொடுக்க முடியும்: சிலர் மற்ற வரங்களுக்கு தங்களை ஒப்புக்கொடுக்க முடியும். எனவே எல்லா வரங்களும் ஒரேவிதமாய் இருக்காது. அன்று அவைகள் ஒரேவிதமாய் இருக்கவில்லை; பவுல் அவைகள் அப்படியில்லை என்று கூறினான். ஆனால் ஒவ்வொரு மனுஷனும் ஒரு நோக்கத்திற்காக அழைக்கப்பட்டு சபைக்குள் நியமிக்கப் படுகிறான். தேவன் அவனை எதில் சிறப்பாகப் பயன்படுத்த முடியும் என்பதை நீங்கள் கண்டுபிடித்து, அந்த ஸ்தானத்திற்கு தன்னை ஒப்புக்கொடுத்தால், அவன் ஒரு வெற்றியாளனாக இருப்பான். [சகோதரன் பிரன்ஹாம் தன் தொண்டையை சரிசெய்து கொள்கிறார் - ஆசி.] என்னை மன்னிக்கவும். 36. எனது விரல் எவ்வளவு முயன்றாலும் என் காதின் ஸ்தானத்தை ஒருபோதும் எடுக்க முடியாது. எனது வாய் என் கண்ணின் ஸ்தானத்தை எடுக்க முடியாது. ஆனால் ஒவ்வொரு அவயவமும் தன்னால் என்ன செய்ய முடியும் என்பதை, அறிந்தவைகளாய், மேலும் அவைகள் அனைத்தும் ஒன்றாக ஒருங்கிணைந்து சரீரத்தை இயங்கப்பண்ணுகின்றன. இந்த சபை அதை மட்டும் பார்க்க கூடுமானால், அதற்கு ஒருங்கிணைந்து செயலாற்றுதல் தேவையாயிருக்கிறது என்பதை மட்டும் நீங்கள் பார்க்கக் கூடுமானால், அது கிறிஸ்துவின் அனைத்து சரீரத்தினுடனும் ஒத்துழைக்க வேண்டும். மெதடிஸ்ட், பாப்டிஸ்ட், கத்தோலிக்கர், பெந்தெகொஸ்தேயினராகிய நீங்கள், என்னவாக நீங்கள் இருந்தாலும், நாம் ஸ்தாபனங்களின் மூலம் பிரிந்திருக்கிறோம். ஆனால் ஆவியிலும், இருதயத்திலும், கொள்கைகளிலும் நாம் ஒருபோதும் பிரிந்திருக்கக்கூடாது. நாம் எப்போதும் ஒன்றாகவே இருக்க வேண்டும். 37. மனுஷர் என்னுடன் வேறுபடலாம். அவர்கள் அனைவரும் பெரும்பாலும் அப்படியே செய்கிறார்கள், ஆனால் அது என்னை தடுத்து நிறுத்துகிறதில்லை. சகோதரன் மீதான அன்பு, அவன் தன்னால் முடிந்தவரை சிறப்பாக வேலை செய்கிறான், ஒருக்கால் தேவன் அவன் அதை செய்ய விரும்புகிறார். அவன் அந்த வழியில் அதைச் செய்ய வேண்டும் என்று அவர் விரும்பினால், பரவாயில்லை. ஒருவேளை ஒருவர் பிணியாளிகளுக்காக ஜெபிக்கலாம், வரிசை கிரமத்தில் நிறுத்தி அவர்கள் மீது கைகளை வைக்கலாம், மற்றொருவர் அவர்கள் மீது எண்ணெய் ஊற்றலாம், தேவன் அந்த மனிதனை என்ன செய்ய அழைத்தாரோ அதைச் செய்யலாம். சரி. அது அற்புதமானது. 38. இப்போது, இயேசு கலிலேயாவில் இருந்தபோது அவர் என்னவாக இருந்தார் என்பதை நாம் அறியக்கூடுமானால், இன்றிரவு அவர் லாஸ் ஏஞ்சல்ஸில் இருப்பாரேயானால், அவரது செய்கையும், நடந்து கொள்ளுதலும், அவர் அப்பொழுது இருந்ததைப் போலவே இருக்கும், அவ்வாறு இல்லையெனில் அது அப்பொழுது இருந்ததை விட மாறுபட்ட இயேசுவாக இருக்கும். அவர் எல்லா வழிகளிலும் ஒரே விதமாகவே இருக்க வேண்டும், ஆனால் கிறிஸ்துவின் மூலமாக, அந்த நாளில் இயேசுவின் மாம்சத்தின் மூலமாக தேவன் கிரியை செய்தது போல, உங்கள் மாம்சத்தின் மூலமாகவும், எனது மாம்சத்தின் மூலமாகவும் கிரியை செய்கிறார். 39. சாயங்காலத்தில் வெளிச்சம் உண்டாகும் என்று வேதாகமம் வாக்குத்தத்தம் செய்திருக்கிறது. சகோதரன் டுப்ளெசிஸ் சில நிமிடங்களுக்கு முன்பு தனது செய்தியில், வாரத்தின் பிற்பகுதியில், அதற்கான வேதவசனங்களை எடுத்துரைக்க போவதாகக் கூறினார். நமது ஒவ்வொரு அசைவும் வேதப்பூர்வமாக இருக்க வேண்டும். அது "கர்த்தர் உரைக்கிறதாவது" என்பதாக இருக்க வேண்டும் என்று நான் விசுவாசிக்கிறேன். அப்படியானால் அது சத்தியம் என்பதை அறிந்தவனாய், நான் அந்த நிலையில் என் ஆத்துமாவை அதன் மேல் சார்ந்திருக்கும்படி செய்வேன். 40. இப்போது, நேற்று இயேசு கிறிஸ்துவை வெளிப்படுத்த தேவனுடைய கிரியைகள் என்னவாக இருந்தன என்பதை நாம் கண்டுபிடிக்கக்கூடுமானால், அவருடைய வெளிப்படுத்தல் என்னவாக இருக்கிறது என்பதை நாம் காண வேண்டும். அன்று இருந்ததைப் போலவே அது இன்றும் இருக்க வேண்டும். இப்போது, முதல் காரியமாக என் நேரத்தை இழக்காமல் காத்துக்கொள்ளதக்கதாக இயேசு ஒரு தெய்வீக சுகமளிப்பவர் என்று ஒருபோதும் உரிமைகோரியதில்லை, அதை நாம் அனைவரும் அறிவோம். பரிசுத்த யோவான் 5:19ல், "பிதாவானவர் செய்யக் குமாரன் காண்கிறதெதுவோ அதையேயன்றி வேறொன்றையும் தாமாய்ச் செய்யமாட்டார்" என்று இயேசு கூறினார். 41. அவர் பெதஸ்தா குளத்தினூடாக சென்றபோது அல்லது அதனருகே கடந்து சென்றபோது, முடவர், குருடர், சப்பாணிகள், வளைந்தவர்கள், சூம்பின உறுப்புடையவர்கள் முதலான திரளான ஜனங்கள் தண்ணீர் எப்பொழுது கலங்கும் என்று காத்துக்கொண்டிருப்பார்கள். இதோ, இங்கே இயேசு முடவர், சப்பாணிகள், குருடர் மற்றும் சூம்பின உறுப்புடையவர்கள் முதலான அந்த ஜனங்களின் மத்தியில் கடந்து சென்று, ஒரு மரப்படுக்கையின் மேல் படுத்திருந்த ஒரு மனுஷனிடம் செல்கிறார். 42. இங்குள்ள உங்களில் சிலருக்கு வைக்கோற்படுக்கை (Pallet) என்றால் என்னவென்று தெரியுமா? நல்லது, அது சில... நான் அப்படிப்பட்டதான ஒன்றில் வளர்க்கப்பட்டேன். அது குளிர்ச்சியாக இருக்கக்கூடிய வாசலருகே போடக்கூடியதான ஒரு மெத்தையாகும். நான் ஒரு தெற்கத்தியன். அதனால், அதுதான் ஒரு... நான் அதை ஒரு வைக்கோற்படுக்கை என்று அழைப்பேன். அவனை அங்கே அவர்கள் படுக்க வைத்திருந்தார்கள். 43. மேலும் கவனியுங்கள், இயேசு அந்த ஜனங்களெல்லாரையும் கடந்து சென்று, மனதுருக்கத்தால் நிறைந்து அந்த ஒரே மனுஷனிடத்தில் போய், "சொஸ்தமாக வேண்டுமென்று விரும்புகிறாயா?" என்று கேட்டார். 44. அதற்கு அவன், "என்னைக் குளத்தில் கொண்டுபோய் விடுகிறதற்கு ஒருவருமில்லை" என்றான். இப்போது, அவன் முடமானவனாகவோ, குருடனாகவோ, சூம்பின உறுப்புடைய வனாகவோ இல்லை. அவன் வளர்ச்சி குறைபாடு வியாதி கொண்டிருந்தான். அவன் அதை முப்பத்தெட்டு வருஷங்களாக கொண்டிருந்தான். அது அவனைக் கொன்றுபோடப் போவதில்லை. எனவே அவன், "என்னைக் குளத்தில் கொண்டு போய் விடுகிறதற்கு ஒருவருமில்லை, நான் போகிறதற்குள்ளே வேறொருவன் எனக்கு முந்தி இறங்கிவிடுகிறான்" என்றான். 45. இயேசு அதை அறிந்தவராய், அவனைத் தேடிக் கொண்டிருந்தார். அவன் எங்கே இருக்கிறான், அவன் எப்படியாக இருப்பான் என்பதை பிதாவானவர் அவருக்குக் காண்பித் திருந்தார். "மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன் பிதாவானவர் செய்யக் குமாரன் காண்கிற தெதுவோ, அதையேயன்றி, வேறொன்றையும் தாமாய்ச் செய்யமாட்டார்; அவர் எவைகளைச் செய்கிறாரோ, அவைகளைக் குமாரனும் அந்தப்படியே செய்கிறார்." அவர் அந்த மனுஷனைப் பார்த்து, கூறப்பட்ட விதமாகவே அவன் இருப்பதை அறிந்திருந்ததால், அவர், "உன் படுக்கையை எடுத்துக்கொண்டு உன் வீட்டுக்குப் போ" என்று சொல்லி, ஜனக்கூட்டத்தை விட்டு விலகி சென்றார். அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. 46. இன்று லாஸ் ஏஞ்சல்ஸில் அவர் அப்படிச் செய்திருந்தால் அவரிடம் எப்படிப்பட்ட கேள்வி எழுப்பப்படும்? அவர் அப்படி ஒரு காரியத்தை இன்று செய்தால் என்ன நடக்கும்? ஆனால் அது நேற்று இருந்த இயேசு. அவர் இன்றும் மாறாதவராக இருக்கிறாரென்றால் அது இன்றும் இயேசுவாகவே இருக்க வேண்டும். 47. ஆனால் அவர் தம்முடைய மேசியாவின் அடையாளத்தை காண்பிக்க என்ன செய்தார் என்பதை கவனிப்போம். இப்போது, பிணியாளிகளை சுகப்படுத்துவது மேசியாவின் முற்றிலுமான அடையாளமாயிருக்கவில்லை. அதை எவரும் அறிவர். பிணியாளிகளை சுகப்படுத்துவது மேசியாவின் அடையா ளமல்ல, ஏனென்றால் மேசியா வருவதற்கு பல வருஷங்களுக்கு முன்பே தீர்க்கதரிசிகள் பிணியாளிகளை சுகமாக்கினர். 48. இந்தக் கடைசி நாட்களில், தெய்வீக சுகமளித்தலின் இந்த மகத்தான எழுப்புதலில் பிணியாளிகளை சுகப்படுத்துவது என்பது இயேசுவின் வருகையின் பிரதான அடையாளங்களில் ஒன்றல்ல, ஏனென்றால் பெந்தெகொஸ்தேவில், அதாவது எருசலேமில் மேசியா சென்றதிலிருந்து இரண்டாயிரம் வருஷங்களாக, மீண்டுமாக அவர் திரும்புமளவும், நாம் தெய்வீக சுகமாக்குதலை கொண்டிருக்கிறோம், ஆனால் மேசியாவிற்குரிய அடையாளமாகவும், காலத்தின் முடிவிற்கான அடையாள மாகவும் ஒரு அடையாளம் உண்டாயிருந்தது. 49. இப்போது நினைவில் கொள்ளுங்கள், அவர் தமக்குச் சொந்தமானவர்களிடம் வந்தார், புறஜாதியாரிடம் அல்ல. அவர் தமக்குச் சொந்தமானவர்களிடம் வந்தார், ஏனென்றால் அவர்கள் ஒரு மேசியாவைத் தேடிக்கொண்டிருந்தனர். அவரைத் தேடுபவர்களிடம் மாத்திரமே அவர் வருவார். இரட்சிக்கப்பட விரும்புகிறவர்களை மட்டுமே அவர் இரட்சிப்பார். தாங்கள் சுகமடைவோம் என்று விசுவாசிக்கிறவர்களை மட்டுமே அவர் சுகமாக்குவார். அவர் ஒருபோதும் தாமாகச் செய்ய முற்படுவதில்லை. நீங்கள்தான் அதை செய்ய வேண்டும். நீங்கள் சுய விருப்பத்தின் படி தெரிந்து கொள்ளும் சுயாதீனத்தை பெற்றுள்ளீர்கள். ஏதேன் தோட்டத்தில் உங்கள் விருப்பத்தை தெரிந்துகொள்ளும் ஸ்தானத்தில் நீங்கள் வைக்கப்பட்டீர்கள். ஆனால் அவர் தமக்குச் சொந்தமானதிலே வந்தார். 50. இப்போது, நாம் வேதவாக்கியத்தைப் பார்க்கும் விதத்தின்படி, எல்லா மனுஷரும் ஆதாம் என்ற ஒரே விருட்சத்திலிருந்து வந்தவர்கள். ஜலப்பிரளயத்தின் அழிவுக்குப் பிறகு, வெள்ளம் வந்து நோவாவின் மூன்று குமாரர்களையும் அவர்களின் குடும்பங்களையும் தவிர அனைத்து மனுஷரையும் அழித்தது. காம், சேம் மற்றும் யாப்பேத், அதாவது அவனுடைய நாளின் யூதர், புறஜாதியர் மற்றும் பாதி யூதன் பாதி புறஜாதியான சமாரியர்களே. அதிலிருந்துதான் இன்று உலகத்திலுள்ள ஒவ்வொரு ஜாதியும் தோன்றின. 51. இப்போது, இயேசு தன்னையே யூதருக்கு வெளிப் படுத்தியபோது... அவர் தன்னை மேசியா என்று அந்த யூதர் அறிந்து கொள்ள என்ன செய்தார் என்பதை சற்றே வேதவாக்கியத்தில் பார்ப்போம். நான் பரிசுத்த யோவான் புஸ்தகத்திலிருந்து வாசித்துக் கொண்டிருந்தேன். பரிசுத்த யோவான், முதலாம் அதிகாரத்தை எடுத்துக் கொள்வோம். நாம் வாசிக்கையில், அவர் வனாந்தரத்தில் சோதிக்கப்பட்டு, வெளியே வந்து, அவர் பரிசுத்த ஆவியினால் அபிஷேகம் பண்ணப்பட்டு, அவருக்குள் இருந்தார் என்பதை நாம் காண்கிறோம். "யோவான் சாட்சியாகச் சொன்னது: தேவன் புறாவைப்போல வானத்திலிருந்திறங்குகிறதைக் கண்டேன், 'இவர் என்னுடைய நேச குமாரன், இவரில் வாசம்பண்ண பிரியமாயிருக்கிறேன்'" என்று ஒரு சத்தம் உண்டாயிற்று என்றான். 52. அவர் கிறிஸ்துவில் வாசம் செய்தார். பிதாவாகிய தேவனாகிய யேகோவா தம்முடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவில் வாசம் செய்து, அங்கே கூடாரமிட்டு, தம்மை வெளிப்படுத்தி, தாம் என்னவாயிருந்தார் என்பதை உலகுக்குக் காண்பித்தார். அதனால்தான் சீஷர்களால் அவரைப் புரிந்து கொள்ள முடியவில்லை. "நீர் விடுகதைகளாய் பேசுகிறீர்" என்று அவர்கள் கூறினர். அது சில வேளைகளில் இயேசு பேசிக் கொண்டிருப்பதாகவும், சில வேளைகளில் பிதா பேசிக் கொண்டிருப்பதாகவும் இருந்தது. 53. நீங்கள் பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டிருந்தால், உங்களுக்கும் அது அவ்விதமாகத்தான் இருக்கும். பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்ட எந்த மனுஷனும், அவன் உண்மையிலேயே ஆவியின் கட்டுக்குள் சென்றானானால், சில நேரங்களில் தான் என்ன சொல்கிறான் என்பதை அறியாதவனாக அதைக் கூறுகிறான். 54. அந்நியபாஷைகளின் வரங்களைக் கொண்ட உங்களைக் குறித்து என்ன? வேறேதேனும் ஊக்குவிக்குதலைக் குறித்து என்ன? அந்நிய பாஷையாக இல்லாமல், அது ஆங்கிலத்தில் இருந்தாலும், அது இன்னும் ஊக்குவிக்கப் படுதலாக இருப்பதால், நீங்கள் அதைப் பேசுகிறீர்கள். நான் ஆவியினால் மிகவும் ஊக்குவிக்கப்பட்ட நேரங்களைக் கொண்டிருந்து, நான்தான் அதை செய்தேன் என்றுகூடத் தெரியாமல் நான் காரியங்களை உரைத்தும் எழுதியுமிருக்கிறேன். நீங்களும் கூடத்தான், அதில் ஐயமில்லை. அதுதான் ஆவியின் கிரியைகள். 55. இப்போது, இயேசு எவ்வாறு தம்மை வெளிப்படுத்தினார் என்பதை நாம் கவனிப்போம். பரிசுத்த யோவான், முதலாம் அதிகாரத்தை நாம் தொடர்ந்து வாசிக்கையில், சீமோன் பேதுரு என்ற பேர் கொண்ட ஒரு மனுஷன் இருந்ததைக் காண்கிறோம், நாம் அவனை அப்படிதான் அழைத்தோம். அவனுடைய முதற்பெயர் சீமோன், இயேசு அவனுக்கு பேதுரு என்று பெயரிட்டார். அவன் கர்த்தராகிய இயேசுவினிடத்தில் வந்தான், அவன் பேதமையுள்ள மனுஷனாயிருந்தான். அவன் பேதமையுள்ளவன் என்று தேவன் அறிந்திருந்தார். அவன் பேதமையுள்ளவனென்றும், படிப்பறியாதவனென்றும், வேத வாக்கியம் கூறுகிறது. அநேகமாய் பெயரைக் கூட எழுதத் தெரியாதவனாக இருந்திருக்கலாம். அவன் ஒரு மீனவனாயிருந்தான். 56. அவன் சகோதரன் அவனைக் கண்டு, "நாங்கள் எதைக் கண்டோமென்று அல்லது நாங்கள் யாரைக் கண்டோமென்று வந்து பார்" என்றான். மேசியா என்று உரிமைக்கோரிய இந்த மனிதருடன் அவன் தொடர்பு கொண்ட போது, அவனைப் பார்த்தவுடன் அவர், "உன் பெயர் சீமோன், நீ யோனாவின் குமாரன்," என்றார். 57. அவர் பேதுருவிடம் என்ன கூறிக்கொண்டிருந்தார்? அதாவது... பேதுருவே சபையின் தலைவனாக இருந்தான். சந்தேகத்திற்கு இடமின்றி அது மேசியாதான் என்பதை அவன் அறிந்து கொள்வான் என்று அவர் அவனிடம் கூறிக் கொண்டிருந்தார். அந்த பேதமையுள்ள மீனவன், அவன் என்ன நினைத்திருப்பான் என்று வியக்கிறேன், இயேசுவுக்குத் தன்னைத் தெரியாது என்று அறிந்திருந்தபோது, அவர் அவன் யார் என்பதையும், அவன் தந்தையின் பெயர் என்னவென்பதையும் அவனுக்கு கூறினார். அது அவனை வியப்பில் ஆழ்த்தியது. 58. பிலிப்பு என்னும் பெயர்கொண்ட மார்க்கத்தினின்று திரும்பின ஒருவன் அங்கே நின்று கொண்டிருந்தான். அவன்... அது முதலாம் அதிகாரத்தில் தொடர்கிறது. அவன் மிகுந்த வைராக்கியம் கொண்ட கிறிஸ்தவ விசுவா... - அல்ல மரபுறுதிக் கொண்ட விசுவாசியான, தனது நண்பனாகிய நாத்தான்வேலைக் கண்டுபிடிக்க மலையைச் சுற்றி வருகிறான். மேலும் நாம்... அவன் ஒரு மரத்தடியில் ஜெபம் செய்து கொண்டிருப்பதை அவர்கள் கண்டிருக்கக்கூடும். அவன் "யாரைக்கண்டோமென்று வந்து பார், அவர் யோசேப்பின் குமாரனும் நாசரேத்தூ ரானுமாகிய இயேசுவே" என்றான். 59. பாருங்கள், நிச்சயமாக, இந்த மனுஷன் கோட்பாட்டின் பலவித காற்றினாலே அடிபட்டு அலைகிறவனாயிராத, ஒரு நல்ல மனுஷனாக இருப்பதனால், அவன் - அவன்... நான் அவனை வியந்து பாராட்டுகிறேன். "இப்போது, நாசரேத்திலிருந்து யாதொரு நன்மை உண்டாகக்கூடுமா?" என்றான். 60. "வந்து பார்", என்று எந்த மனுஷனும் அவனுக்கு கொடுக்கக் கூடியதான மிகச்சிறந்த பதிலை பிலிப்பு அவனுக்குக் கொடுத்தான் என்று நான் நினைக்கிறேன். வீட்டில் இருந்து கொண்டு அதை குறை கூறிக்கொண்டிருக்க வேண்டாம், வந்து, அதைப் பற்றிய உண்மைகளை ஆராய்ந்து, வேதவாக்கியங்கள் மூலம் அதை ஆராய்ந்து, அது சரியாக இருக்கிறதா என்று பாருங்கள். 61. ஏனெனில் தேவ-தீர்க்கதரிசி ஒருவர் எழும்புவார் என்று அவர்கள் விசுவாசித்துக் கொண்டிருந்தார்கள். நீங்கள் அதை விசுவாசிக்கின்றீர்களா? மோசே, "உன் தேவனாகிய கர்த்தர் என்னைப்போல ஒரு தீர்க்கதரிசியை எழும்பப்பண்ணுவார்" என்றான். இந்த மேசியா வரும்போது அவர் ஒரு ஞானதிஷ்டிக்காரராய், ஒரு தீர்க்கதரிசியாயிருப்பார் என்பதை அவர்கள் அறிந்திருந்தார்கள். 62. எனவே, அவர்கள் இயேசுவைத் தேடிச் சென்றபோது, பிலிப்பு அவனிடம் என்ன சொல்லியிருப்பான் என்பதில் சந்தேகமில்லை, "சீமோன் என்றழைக்கப்படும் அந்த வயதுசென்ற பேதமையுள்ள மீனவனை உனக்குத் தெரியுமா? அவர் சமுகத்தில் அவன் நுழைந்தவுடனே, அவன் யார் என்பதை அவர் அறிந்திருந்தார்." அவன், "'இந்த மனுஷனுக்கு என்னை எப்படித் தெரியும்?' அது அவர் தேவ- தீர்க்கதரிசி என்பதை நிரூபிக்கிறது. மோசே முன்னமே சொல்லியிருந்தவர் இவரேதான். மோசேயும், நியாயப்பிரமாணத்திலேயும் உரைக்கப்பட்ட அந்த அவரை நாங்கள் கண்டோம். வந்து, நீயே பார்த்துக்கொள்." அது நல்லது. நான் அதை நேசிக்கிறேன். 63. வெறுமனே வீட்டில் இருந்து கொண்டு குறை கூறிக் கொண்டிருக்க வேண்டாம். வந்து தெரிந்து கொள்ளுங்கள்... அது மரணத்துக்கும் ஜீவனுக்கும் உள்ள வித்தியாசமாகும். அது சரியானதாக இல்லை என்றால், அதை விசுவாசிக்க வேண்டாம். அது சரியானதாக இருக்குமேயானால் அதை விசுவாசியுங்கள். அதன் பின்னால் நில்லுங்கள். இதைத்தான் நான் எப்போதும் ஜனங்களுக்கு கூற முயன்றேன். கிறிஸ்து கிறிஸ்துவாக இருப்பாரானால் பரிசுத்த ஆவியானவரின் இந்த ஆசீர்வாதம் தேவனால் உண்டாயிருந்தால், நம்மால் முடிந்த எல்லாவற்றையும் கொண்டு அதன் உடனிருந்து அதன் வழிநடத்துதலைப் பின்பற்றுவோம். அவ்விதம் இல்லையேல், அதை விட்டு விடுங்கள். அது வார்த்தையின்படி தன்னைத் தானே நிரூபிக்கும். "தேவன் நடாத நாற்றெல்லாம் வேரோடே பிடுங்கப்படும்," வேதம் அவ்வாறு உரைக்கிறது. 64. இப்போது அவனது சிநேகிதன் கூறியபிறகு, பிலிப்பு சந்தித்த அதாவது நாத்தான்வேல் சந்தித்த இப்படிப்பட்ட ஒரு நெருக்கடியான நிலையை நாம் காண்கிறோம், அது... அவன் இப்படி ஏதாவது கூறியிருப்பான் என்று நான் நினைக்கிறேன் : "இப்போது, நாத்தான்வேல், நான்... அதாவது பிலிப்பு, நீ ஒரு நல்ல ஆழ்ந்து சிந்திக்கும் மனுஷன் என்பதை நான் எப்போதும் அறிந்திருக்கிறேன். நீ மேசியா நாசரேத்திலிருந்து வருகிறார் என்றா கூறுகிறாய்? மேசியா நாசரேத்திலிருந்து வரப் போவதில்லை, பெத்லகேமிலிருந்து வரப்போகிறார். அப்படியிருக்க நீ இந்த காரியங்களையெல்லாம் என்னிடம் கூறுவதென்ன." 65. "நல்லது," அவன், "குறைகூற ஆரம்பிக்க வேண்டாம், இவையெல்லாம் உனக்கு புரியாமல் இருக்கலாம். சற்றே வந்து, அதை ஆராய்ந்து பார், நீ வரும்போது நீ யாரென்று அவர் அறிந்திருந்தாலும் அது என்னை ஆச்சரியப்படுத்தாது" என்றான். 66. மேலும் அவர்கள் இயேசு ஜெபம் பண்ணிக் கொண்டிருந்த இடத்திற்கு முன்பாக நடந்து வந்தார்கள். ஒருவேளை அவர்கள் அவருடன் ஜெப வரிசையில் வந்திருக்கலாம். எனக்கு தெரியாது. ஆனால் அவரை முதல் முறையாக காண, இயேசுவின் பிரசன்னத்தில் அவன் வந்த போது, இயேசு "இதோ, கபடற்ற உத்தம இஸ்ரவேலன்" என்றார். நீங்கள், "நிச்சயமாக, அவன் அவர்களைப் போலவே உடை உடுத்தியிருந்தான்" என்று கூறலாம். 67. எல்லா கிழக்கத்தியர்களும் ஒரே மாதிரியான உடை உடுத்துகிறார்கள். அவன் கிரேக்கனாக இருந்திருக்கலாம். அவன் ஒரு எகிப்தியனாக இருந்திருக்கலாம். அவன் அந்த கிழக்கத்திய ஜனங்களில் யாராக வேண்டுமானாலும் இருந்திருக்கலாம். அவர்கள் அனைவரும் தாடியுடன், ஒரே மாதிரியான அங்கிகளையும், தலைப்பாகைகளையும் உடுத்தியிருந்தனர்." ஆனால் அவன் ஒரு விசுவாசி, ஒரு இஸ்ரவேலன் என்று இயேசு அறிந்திருந்தார். அவன் ஒரு மாய்மாலக்காரனாக இருந்திருக்கலாம், அவன் ஒரு அவிசுவாசியாக இருந்திருக்கலாம். ஆனால் இயேசு, "கபடற்ற உத்தம இஸ்ரவேலன்." என்றார். 68. சுமார் பதினைந்து மைல் தொலைவில் இருந்த மலையில் நடந்த அந்த போதனைக் கூட்டத்தில், பிலிப்பு வேத வசனங்களிலிருந்து அவரைப்பற்றி அவனுக்கு போதித்திருந்தான் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. அவன் ஆயத்தமாக இருந்தான். 69. அதனால்தான் சகோதரன் டுப்ளெசிஸ் போதிக்கும்படியாக இங்கேயிருக்கிறார். பத்து வருடங்களாக அவர் கூட்டங்களில் கலந்துகொண்டிருக்கிறார் என்று அவர் சொல்லக் கேட்டிருக்கிறேன். நன்மதிப்புக்குரிய ஒரு மனிதர், அதாவது நம்பிக்கைக்குரிய வாக்கையுடைய மனிதர், அவர் தனது சொந்த வார்த்தையைக் கொடுக்க மாட்டார், அது தேவனுடைய வார்த்தையாக இருக்கும். ஆனால், ஜனங்களுக்கு அறிவுறுத்துவதற்காக, அதனால் அவர்கள்... மேலும் நீங்கள் அவர் கூறுவதற்கு செவிகொடுங்கள். சகோதரன் டுப்ளெசிசும் நானும் இதற்கு முன்பு இந்த பாணியில் ஒருபோதும் ஒன்றாக வேலை செய்ததில்லை. ஆனால் நான் - நான் அவர் கூற கேட்டிருக்கிறேன்... எவ்வளவு காலம் அவர் கூட்டங்களில் கலந்துகொண்டு வந்தார் என்றும் எனக்குத் தெரியாது. நான் ஒருபோதும் அறியேன்; ஜனங்கள் வந்து போவார்கள். ஆனால் நான் அவரை நேசிக்கவும், உலகெங்கிலும் உள்ள அனைத்து சபைகளிலும் உயர்ந்த நற்பெயரைக் கொண்ட ஒரு நல்ல மனிதர் என்றும் அறிந்துகொண்டேன். 70. பிலிப்பு, ஒருவேளை ஒரு போதனைக் கூட்டத்தை நடத்தி இருக்கலாம். அவன் நாத்தான்வேலோடு இயேசுவின் பிரசன்னத்தில் நின்றபோது, அவர், "இதோ, கபடற்ற உத்தம இஸ்ரவேலன் என்றார்." 71. அது அவனை வியப்பில் ஆழ்த்தியது. அவன், "அவர் மோசே உரைத்த தேவ - தீர்க்கதரிசியாக இருக்கலாம், ஏனென்றால் அவர் ஒரு தீர்க்கதரிசியாக இருப்பார், ஆனால் அவர் தேவ - தீர்க்கதரிசியாக இருப்பார்" என்றான். அப்போது அவன், "ரபீ, நீர் என்னை எப்படி அறிவீர்?" என்றான். வேறு வார்த்தைகளில் கூறினால், "நீர் என்னை ஒருபோதும் கண்டதில்லையே, எப்படி என்னைப்பற்றி எதையாகிலும் உம்மால் அறிய இயலும்? 72. இயேசு திரும்பிப் பார்த்து, "பிலிப்பு உன்னை அழைக்கிறதற்கு முன்னே, நீ அத்திமரத்தின் கீழிருக்கும்போது உன்னைக் கண்டேன்" என்றார், அத்துடன் அது முடிவு பெற்று விட்டது. "ரபீ, நீர் இஸ்ரவேலின் ராஜா, நீர் தேவனுடைய குமாரன்" என்றான். 73. அது நேற்று இருந்த இயேசுவாகவும், மேசியாவின் நேற்றைய அடையாளமாகவும் இருந்தது, இன்றைக்கும் மேசியாவின் அடையாளம் அதுவாகவே இருக்க வேண்டும். 74. நிச்சயமாக, அங்கே நின்றுகொண்டிருந்த சிலராகிய மிக நேர்த்தியான அறிஞர்கள், ரபீக்கள், சட்ட வல்லுநர்கள், மாமனிதர்கள், அவர்களுடைய ஜீவியத்தை உங்களால் குற்றப்படுத்தவே முடியாத பரிசுத்தவான்கள் அதை விசுவாசிக்கவில்லை. அவர்கள் அப்படி குற்றப்படுத்தக்கூடிய ஜீவியம் செய்திருந்திருப்பார்களேயானால் அவர்கள் கல்லெறியப்படுவார்கள். அவர்கள் பல நூறு வருஷங்களாக ஊழியக்காரர்களின் வழிமரபிலிருந்து வந்தவர்கள், அவர்கள் நியாயப்பிரமாணம் முழுவதும் அறிந்திருந்தனர். 75. வேதாகமத்தை அறிவது ஒரு காரியமாகவும் வேதாகமத்தின் ஆக்கியோனை அறிவது மற்றொரு காரியமாகவும் உள்ளது. வேதாகமத்தை அறிவது உங்களுக்கு நித்திய ஜீவனல்ல ஆனால் அவரை அறிவது, அவரை அறிவதுதான் உங்களுக்கு நித்திய ஜீவன் ஆகும். அவருடைய வேதாகமத்தில் ஒரு வார்த்தை கூட உங்களுக்குத் தெரியாமல் இருக்கலாம், ஆனால் அவருடைய உயிர்த்தெழுதலின் வல்லமையில் நீங்கள் அவரை அறிந்தால், அதுவே நித்திய ஜீவன். 76. இப்போது, இது எவ்வளவு விசித்திரமாயுள்ளது என்பதை நாம் கவனிப்போம். அவன் அதை அடையாளங் கண்டுகொண்ட உடனே, இந்த வைராக்கியமான எபிரெயன் அவருக்கு முன்பாக விழுந்து, அதுதான் மேசியாவின் அடையாளம் என்று அடையாளங் கண்டுகொண்டான். உத்தமமாய் விசுவாசிக்கும் யூதர் எப்போதும் அவ்வண்ணமே செய்தனர். ஆனால் அங்கே சுற்றி இருந்ததான அந்த யூதர்கள் அவர்கள் தங்களை விசுவாசிகள் என்று நினைத்துக் கொண்டும், விசுவாசிகள் என்று கூறிக்கொண்டும், நிச்சயமாக, அவர்கள் பின்னால் நின்றுக்கொண்டு, அவர்கள் தங்களுடைய... இப்போது நினைவில் கொள்ளுங்கள், அது அவர்கள் சிந்தையில் இருந்தது, அதை அவர்கள் தங்கள் உதடுகளால் பேசவே இல்லை என்று வேதம் உரைத்திருக்கிறது. நீங்கள் உங்கள் உதடுகளினால் பேச வேண்டியதில்லை; நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதை தேவன் அறிவார். எபிரெயர் 4-ம் அதிகாரம், தேவனுடைய ஆவியானவர் சிந்தையின் நினைவுகளை வகையறுக் கிறவராயும் இருக்கிறார்: சிந்தையின் நினைவுகளை வகையறுக்கிறவராயும் இருக்கிறார் என்கிறது. 77. அங்கே... அவர்கள் தேவனுடைய சமுகத்தில் இருந்தார்கள், இந்த எபிரெய அறிஞர்கள் அதை அடையாளங் கண்டு கொள்ளவில்லை. அவர்கள் தங்கள் இருதயங்களில், "இந்த மனுஷன் ஒரு குறிசொல்பவன், அல்லது ஒரு பிசாசாகிய பெயெல்செபூல்" என்றனர். குறிசொல்வது பிசாசினால் உண்டானது, அந்தகாரத்தின் கிரியைகள் அனைத்தும் பிசாசினால் உண்டானது, குறி சொல்லுகிறவர்கள், எண்ணங்களை ஆய்பவர்கள், சிந்தையை அறிபவர்கள், மனோவசியத்தின் மூலம் மனதில் உள்ளதை அறிந்து கொள்பவர்கள், இவை அனைத்துமே பிசாசினால் உண்டானது. அது ஆத்துமாக்களை இரட்சிப்பதற்கு சுவிசேஷத்தைப் பிரசங்கிப்பதில்லை. ஆவியின் கனிகளே அது என்னவென்பதை நிரூபிக்கின்றன. இயேசு அவர்களிடம், "அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள்" என்றார். 78. யந்நேயும் யம்பிரேயும் மோசேக்கு எதிர்த்து நிற்கவில்லையா? அங்கே கடந்து வந்து... மோசே தேவன் தனக்கு செய்யும்படி கட்டளையிட்டபடியே அதே விதமாக நிறைவேற்ற, கோலைப் போட்டான் அது சர்ப்பமாக வில்லையா? பின்பு யந்நேயும் யம்பிரேயும் அங்கே நின்று தங்கள் கோல்களை போட்டபோது அவைகள் சர்ப்பங்களாக வில்லையா? 79. கடைசி நாட்களில் அந்த அதே ஆவிகள் தோன்றும் என்று வேதம் உரைக்கவில்லையா? நமது பத்திரிகைகள் இந்த மனோவசியத்தின் மூலம் மனதில் உள்ளதை அறிந்து கொள்வது, பரிமாணங்கள் மற்றும் எல்லாவற்றையும் குறித்து எழுதுவதில் ஆச்சரியமில்லை, அது பிசாசு எழும்புவதாகும். ஆனால் தேவன் தம்முடைய சபையை பாதுகாப்பார். "வெள்ளம்போல் சத்துரு வரும்போது, நான் அதற்கு விரோதமாய்க் கொடியேற்றுவேன்." அது சரி. "என் ஆடுகள் என் சத்தத்தை அறிந்திருக்கின்றன." 80. அவர்களின் கனிகளைப் பாருங்கள். அவர்களில் அநேகர், நாத்திகவாதிகளும், அவிசுவாசிகளுமே. அவர்கள் என்ன செய்கிறார்கள்? அவர்கள் சுவிசேஷத்தைப் பிரசங்கிப்பது, பிணியாளிகளுக்காக ஜெபிப்பது, நன்மை செய்ய முயற்சிப்பது போன்றவற்றைச் செய்வதில்லை. அது சில மரித்த நபர் அல்லது ஏதோவொன்று, சில வல்லமைகளைப் பற்றினதே. செய்தித்தாள் அதை நாடு முழுவதும் பரவச் செய்கிறது. இயேசு கிறிஸ்து தம்முடைய வல்லமையோடு காட்சியில் வரும்போதோ, அவர்கள் அதை ஏளனம் செய்கிறார்கள். 81. பூமியின் மீது வரும் கோபத்திலிருந்து நாம் எவ்வாறு தப்பிக்க முடியும். இந்த அக்கிரமத்தோடு இந்த அமெரிக்க ஐக்கிய நாடுகளை தேவன் தப்பவிடுவாரானால், சோதோம் கொமோராவை எழுப்பி, அவற்றை எரித்ததற்காக மன்னிப்பு கேட்க அவர் கடமைப்பட்டிருக்கிறார். அது சரி. அவர் நீதியும், உண்மையும், சத்தியமும் உள்ளவருமாக இருக்கிறார். அவர் நீதியுள்ளவராக இருக்க வேண்டும், அதுவே அவருடைய பரிசுத்தமாகிறது. அவர் அவளுக்கு நியாயத்தீர்ப்பு வழங்க வேண்டும், அவள் அதை நோக்கிச் செல்கிறாள், அதை நினைவில் கொள்ளுங்கள். 82. ஆனால் மோசே தனது கட்டளைகளை நிறைவேற்றியபோது, ஒரு ஆள்மாறாட்டக்காரன் நின்று கொண்டு மோசே செய்ததையே அங்கு செய்து கொண்டிருந்தான். அப்போது மோசேக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. அப்பொழுது தேவனின் ஏகாதிபத்திய கிருபை வந்து காரியங்களைச் செய்ய வேண்டிய வேளை அதுவாக இருந்தது. அப்போதிருந்தே அது எப்போதும் அப்படியாகத்தான் இருக்கிறது. 83. நீங்கள் அங்குள்ள புஸ்தகத்தில் வாசிக்கும் விதமாக, அதுதான் அந்த வேளையில் போர்ட்லேண்டில் (Portland) சம்பவித்தது, நான் இந்த வார்த்தையை பிரசங்கித்துக் கொண்டிருந்ததால், அந்த வெறிபிடித்த மனிதன் என்னைக் கொலை செய்ய மேடைக்கு வந்தான், மேலும் ஆப்பிரிக்காவில் சூனியக்காரர்களுக்கு முன்பும், இந்தியாவில் பரிசுத்த மனிதர்கள் என்று தங்களை அழைத்துக் கொள்பவர்களுக்கு முன்பும், இந்த எல்லா கள்ளப் பிசாசுகளையும், தேவனுடைய ஆவியானவர் அங்கே நின்றுகொண்டு, அந்தக் காரியத்தை சவால் விடுத்து, அதை அம்பலப்படுத்தாமல் இருந்ததை நான் கண்டதில்லை,. உள்ளவாறே அதை விசுவாசிக்க பல்லாயிரக்கணக்கான ஜனங்கள் சிலுவையண்டையில் வந்தனர். நிச்சயமாக, அவர் இயேசு நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார். 84. நாம் இறுதிக் கட்டத்திற்கு வரும்போது, அதுவே தேவன் செயல்பட வேண்டிய நேரமாகும். அவர்கள் எழும்புவார்கள், ஆனாலும், அவர்களுடைய மதிகேடு எல்லாருக்கும் வெளிப்பட்டதுபோல, இவர்களுடைய மதிகேடும் வெளிப்படும் என்று வேதாகமம் உரைத்திருக்கிறது. 85. ஆகவே, அவ்விதமாகத்தான் தேவன் தம்மை மேசியாவாக இயேசுவின் மூலமாய் வெளிப்படுத்தினார் என்று நாம் பார்க்கிறோம். 86. இப்போது, அநேகமாய், சற்றே இன்னும் ஒரு மேற்கோளைப் பார்போம். ஆசார விரைப்பான யூதர், "இந்த மனுஷன் பிசாசினாலுண்டாயிருக்கிறான். அவன் பெயல் செபூலின் ஆவியைக் கொண்டிருக்கிறான்" என்றார்கள். பெயல்செபூல் என்பது ஒரு பிசாசு, அவர் தங்களைப்பற்றி குறிசொல்கிறார் அல்லது சிந்தையை அறிகிறார் என்று அவர்கள் நினைத்தார்கள். 87. இப்போது, இங்கே ஒரு காரியத்தை நான் உங்களிடம் வலியுறுத்த விரும்புகிறேன். இயேசு திரும்பி, அவர்கள் யோசனைகளை அறிந்து, அவர்கள் என்ன பேசினார்கள் என்பதை அல்ல, அவர்கள் என்ன சிந்தித்தார்கள் என்பதை அறிந்தார். அதை கவனியுங்கள், அவர்களின் யோசனைகளை அறிந்து, அவர் அவர்களை நோக்கி, "நீங்கள் மனுஷகுமாரனுக்கு விரோதமான அந்த வார்த்தை சொன்னால் அது உங்களுக்கு மன்னிக்கப்படும்; எவனாகிலும் பரிசுத்த ஆவிக்கு விரோதமாக வார்த்தை சொன்னால் அது அவனுக்கு ஒருபோதும் மன்னிக்கப்படுவதில்லை" என்றார். 88. அவர் என்ன தீர்க்கதரிசனம் உரைத்தார்? அவருடைய மகிமைப்படுத்தலுக்குப் பிறகு ஒரு நாள் வரும் என்றும், பரிசுத்த ஆவியானவர் சபைக்கு வருகின்றதான இந்த நாட்களில், பரிசுத்த ஆவியானவர் இங்கே இருந்து, அதே காரியத்தைச் செய்வார். அப்பொழுது அதற்கு எதிரான ஒரு வார்த்தையும் ஒருபோதும் மன்னிக்கப்படுவதில்லை. அது மன்னிக்கப்பட முடியாத பாவம். 89. ஒரு ஸ்தீரி, குழந்தையை கருக்கலைப்பு செய்வதுதான் மன்னிக்க முடியாத பாவம் என்று என்னுடைய தெற்கத்திய தாயார் என்னிடம் கூறுவதுண்டு. உங்களுக்கு தெரியுமா, அது ஒரு குழந்தையை பற்றியது. பின்பு மேலும் சிலர் "ஒருவன் தற்கொலை செய்து கொள்வதுதான் அது" என்று கூறுவதைக் கேட்டிருக்கிறேன். அதுவல்ல அது, அவ்வாறு கிடையாது. ஏனென்றால் வேதாகமம், "அவர்கள் தேவனுடைய ஆவியை அசுத்தமான ஒன்று என்று அழைத்தார்கள்" என்று உரைக்கிறது. மேசியாவின்மேல் இருந்த தேவனுடைய ஆவியை அவ்வாறு அழைத்தனர், அவர் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேவ - தீர்க்கதரிசி என்று அவர்கள் அறிந்திருக்க வேண்டியிருக் கையில், அவர்கள் அவரை ஒரு பிசாசு என்றனர். அதுதான் மன்னிக்கப்பட முடியாத பாவம். 90. இந்த காரியத்தை அவர் வெளிப்படுத்த வேண்டிய மற்றொரு பிரிவு ஜனங்கள் அங்கே இருந்தனர். நீங்கள் வேத வசனங்களைப் படித்து எல்லாவற்றையும் கண்டறியலாம். ஆனால் இன்னும் ஒரு கருத்தை உங்கள் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன். பரிசுத்த யோவான் 4, "இயேசு சமாரியா வழியாக செல்ல வேண்டியிருந்தது." அது ஏன் என்று நான் வியக்கிறேன்? அது அவரது செல்லும் பாதையே இல்லை; அவர் எரிகோவுக்குச் செல்லும் வழியில் இருந்தார். அவர் சமாரியாவைச் சுற்றிச்செல்ல வேண்டியிருந்தது. எனவே அவர், அங்கு செல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அது ஏன்? பிதாவானவர் வழிநடத்திக் கொண்டிருந்தார், வேதம் அவ்வாறுதான் உரைக்கிறது. 91. லாசருவின் உயிர்த்தெழுதலை கவனியுங்கள், லாசரு... அவர்கள் அழைத்தனர்... ஜெபம் செய்யும்படியாக... லாசருவுக்காக ஜெபிக்க வரும்படி இயேசுவிடத்திற்கு ஆள் அனுப்பினார்கள். அவர் தொடர்ந்து போய்க் கொண்டே இருந்தார். 92. அதன்பின் அநேக நாட்களுக்குப் பின்பு, பிதாவானவர் அவருக்கு காண்பித்தபின், அவர், "நம்முடைய சிநேகிதனாகிய லாசரு நித்திரையடைந்திருக்கிறான்" என்றார். அவனோ, "அவன் சுகமடைவான்" என்றான். 93. அப்பொழுது அவர், அவர்கள் புரியும் வண்ணமாக அவர்களுக்குச் சொன்னார். "அவன் மரித்துப்போனான். நான் அங்கே இராததினால், உங்கள் நிமித்தம் சந்தோஷப்படுகிறேன்." ஏனென்றால் அவர்கள் லாசருக்காக ஜெபிக்க அல்லது சுகப்படுத்த அவரை வற்புறுத்தியிருப்பார்கள். ஆனால் பிதாவானவர் அவருக்கு என்ன செய்யவேண்டும் என்று சொல்லியிருந்தார், தேவனுடைய வார்த்தைகளை அவரால் மீற முடியாது. அது அவ்விதமாகத்தான் இருக்க வேண்டும். "நான் அவனை எழுப்பப்போகிறேன்" என்றார். 94. கல்லறையில் நடந்ததை கவனியுங்கள் "பிதாவே, நீர் எனக்குச் செவிகொடுத்தபடியினால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். ஆனாலும் சூழ்ந்துநிற்கும் இந்த ஜனங்கள் நிமித்தம் நான் இதைச் சொல்கிறேன்" என்றார். பட்டணத்தை விட்டு வெளியேரும் படியாகவும், லாசருவின் மரணத்தையும் தேவன் அவருக்கு ஒரு தரிசனத்தில் காண்பித்திருந்தார். "ஏனெனில்," அவர், "பிதாவானவர் எனக்குக் காண்பிக்கும்வரை நான் ஒன்றும் செய்கிறதில்லை" என்றார். பின்னர் அவர் இங்கே திரும்பி வந்தார். நிச்சயமாக உயிர்த்தெழுதல் உண்டாயிருக்கும் என்று அவர் அறிந்திருந்தார், ஏனென்றால் தேவன் அவருக்குக் காண்பித்திருந்தார். அவர் அவனோடே பேசினார், மரித்த மனுஷன் உயிர்த்தான். 95. இப்பொழுது, சமாரியாவின் இந்த ஜனங்கள், அவர்கள் பாதி யூதரும் பாதி புறஜாதியாருமாய் இருந்தார்கள். அவர்கள் மேசியாவை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் அளவிற்கு அவர்கள் போதுமான யூத இரத்தையும், போதுமான பக்தியையும் கொண்டிருந்தனர். 96. அதன்பின்பு அவர்கள்... ஒரு நாள் இயேசு வந்து, சற்றே இதைப் போன்றதான ஒரு பரந்த தோற்றம் கொண்ட கிணற்றினருகே உட்கார்ந்தார், சீஷர்கள் யாவரும் போஜனபதார்த்தங்களைக் கொள்ளும்படி ஊருக்குள்ளே போயிருந்தார்கள். அவர்கள் ஊருக்குள்ளே போயிருக்கையில், ஒரு அழகான வாலிப ஸ்திரீ தண்ணீர் மொள்ள கிணற்றண்டை வந்தாள். ஒருவேளை அவள் அவரை கவனிக்காமல் இருந்திருக்கலாம். மேலும் அவர், "ஸ்திரீயே, தாகத்துக்குத்தா" என்றார். அவள் திரும்பிப் பார்த்து ஒரு நடுத்தர வயதுள்ளவரைக் கண்டாள். 97. அவருக்கு முப்பது வயதுதான், ஆனாலும் அவருக்கு ஐம்பது வயது இருக்கும் என்று மதிப்பிடப்பட்டது. "உனக்கு இன்னும் ஐம்பது வயதாகவில்லையே, நீ ஆபிரகாமைக் கண்டேன் என்று நீ சொல்கிறாய்? இப்பொழுது நீ பிசாசு பிடித்திருக்கிறவன் என்று அறிந்து கொண்டோம்" என்றனர். அதற்கு இயேசு, "ஆபிரகாம் உண்டாகிறதற்கு முன்னமே நான் இருக்கிறேன்" என்றார். 98. ஆனால் அவள், "ஒரு சமாரிய ஸ்திரீயினிடத்தில் யூதர்களாகிய நீங்கள் இப்படிக் கேட்பது வழக்கமல்லவே. நமக்குள் எந்த சம்பந்தங்கலத்தலுமில்லை; பிரிவினை இருக்கிறது" என்றாள். "நாம் ஒருவருக்கொருவர் சம்பந்தங்கலவாதவர்கள்" என்றாள். 99. ஆனால் அதற்கு அவர், "நீ பேசிக்கொண்டிருக்கிறவர் இன்னார் என்பதை அறிந்திருந்தாயானால்" கவனியுங்கள், அவர் அந்த ஸ்திரீயினுடைய ஆவியுடன் தொடர்பு கொள்கிறார். "நீ பேசிக்கொண்டிருக்கிறவர் இன்னார் என்பதை அறிந்திருந் தாயானால், நீயே என்னிடத்தில் தாகத்துக்குக் கேட்டிருப்பாய்" என்றார். 100. புரிகிறதா, அந்த உரையாடல் சற்று நேரம் தொடர்ந்து சென்றது. அவர் என்ன செய்து கொண்டிருந்தார்? இப்போது கவனியுங்கள், அது நேற்று இருந்த இயேசு, அவர் அவளது ஆவியை தொடர்பு கொண்டு, அவளுடைய பிரச்சனை என்னவென்று கண்டுகொண்டிருந்தார். மேலும் எருசலேமில் அல்லது மலையில் தொழுதுகொள்ளுதலைப் பற்றிய உரையாடல் தொடர்ந்தது. மேலும் சில நிமிஷங்களிலே, இயேசு கூறியதாவது... அவளுடைய பிரச்சனை எங்கே இருந்ததென்பதை அவர் கண்டறிந்து, அவர், "நீ போய், உன் புருஷனை இங்கே அழைத்துக் கொண்டுவா" என்றார். அதற்கு அவள், "எனக்குப் புருஷன் இல்லை" என்றாள். "நீ சொன்னது சரிதான், எப்படியெனில் ஐந்து புருஷர் உனக்கிருந்தார்கள். இப்பொழுது உனக்கிருக்கிறவன் உன்னுடையவனல்ல. நீ சரியாய் சொன்னாய்" என்றார். 101. இப்பொழுது அவளைக் கவனியுங்கள். "நீர் ஒரு பிசாசு, ஒரு பெயல்செபூல்" என்று அவள் சொல்லவில்லை. சட்டென அவள் எழுந்தாள். அவளது கரிய பெரிய கண்கள் பிரகாசிப்பதை என்னால் காண முடிகிறது. அவள் தலையில் முக்காடிட்டு, நோக்கிப் பார்த்து, "ஆண்டவரே, நீர் தீர்க்கதரிசி என்று காண்கிறேன்" என்றாள். ஓ, என்னே! இன்று அநேக ஊழியக்காரர்கள் அறிந்திருப்பதைக் காட்டிலும் அவள் தேவனைப் பற்றி அதிகம் அறிந்திருந்தாள். அது சரி. அதைச் சொல்ல எனக்கு வெறுப்பாய் இருக்கிறது, ஆனாலும் அது உண்மை. அவள் தேவனைப் பற்றி அதிகம் அறிந்திருந்தாள். அவள், "ஆண்டவரே, நீர் தீர்க்கதரிசி என்று காண்கிறேன்" என்றாள். 102. அவளுடன் எத்தனை பேர் உடன்படுவீர்கள்? நாம் அனைவருமே. வருவார் என்று மோசே சொன்ன ஒரு தேவ-தீர்க்கதரிசி அது அவர்தான். அவள் அதை அறிந்திருந்தாள். அவளுடைய கூற்றைக் கவனியுங்கள். "நீர் தீர்க்கதரிசி என்று காண்கிறேன்." போதகர்கள் சொன்னவிதமாக, ஒரு பெயல்செபூல் என்றல்ல. ஆனால், "நீர் ஒரு தீர்க்கதரிசி. நாங்கள் அறிந்திருக்கிறோம்... மேசியா வரும்போது, இவைகளை எங்களுக்கு அறிவிப்பார் என்று சமாரியர்களாகிய நாங்கள் அறிந்திருக்கிறோம்" என்றாள். புரிகிறதா, அது மேசியாவின் அடையாளமாயிருக்கும். "மேசியா வரும்போது எல்லாவற்றையும் நமக்கு அறிவிப்பார்." 103. வேறு விதமாக கூறுவோமானால், "நீர் அவருடைய தீர்க்கதரிசியாக இருக்க வேண்டும், ஏனென்றால் நீர் என்னுடைய பிரச்சனையை, துர்க்கீர்த்தியுடைய ஸ்திரீயாக இருப்பதுதான் என்னுடைய பிரச்சனை என்பதை அறிந்திருந்தீர், மேலும் நீர் என்னை அறியீர். நீர் ஒரு யூதன், நான் ஒரு சமாரிய ஸ்திரீ. ஆனால் மேசியா இதைச் செய்வார் என்று நான் போதிக்கப்பட்டும், விசுவாசித்துமிருக்கிறேன். ஆனால் நீர் யார்? அதற்கு இயேசு, "உன்னுடனே பேசுகிற நானே அவர்" என்றார். ஓ, எப்படிப்பட்டதான ஒரு வார்த்தை! உடனே, அவள் தன் குடத்தை போட்டுவிட்டு, ஊருக்குள்ளே ஓடி, "நான் செய்த எல்லாவற்றையும் ஒரு மனுஷன் எனக்குச் சொன்னார், அவரை வந்து பாருங்கள், அவர் மேசியாதானோ?" என்றாள். 104. தேவனுடைய கிரியைகள் என்ன? இப்போது நினைவில் கொள்ளுங்கள். அந்த அடையாளம் புறஜாதியாருக்கு கொடுக்கப்படவில்லை. நீங்கள் அதை வேதாகமத்தில் காணமுடியாது. அது ஏன்? அவர்கள் அதை எதிர்பார்த் திருக்கவில்லை. ஆனால் இப்போது, இன்னும் ஒரு சந்ததி ஜனங்கள் மீதியாயுள்ளனர், இன்னும் ஒரு, நான் அதை "வகுப்பினர்" அல்லது "மீதமுள்ளவர்" அல்லது நீங்கள் அந்த ஜனங்களை எப்படி அழைக்க விரும்பினாலும் அது புறஜாதியினரே. கடைசி நாட்களில் என்ன சம்பவிக்கும் என்று அவர் தீர்க்கதரிசனம் உரைத்தார். அவர்கள் பரியாசம் செய்து, அது ஒரு பொல்லாத ஆவி என்று கூறியதற்காக அவர்களை மன்னிப்பார். ஆனால் புறஜாதியினரோ மேலானதை அறிந்திருப்பார்கள். 105. இப்போது, நாம் புறஜாதி காலத்தின் முடிவு வேளையில் இருக்கிறோம். தேவன் காட்சியில் அழைக்கப்படும்போது, அவர் முதல் முறையாக செயல்படுவது போலவே ஒவ்வொரு முறையும் செயல்பட வேண்டியதாக இருக்கிறது. ஒரு பாவி எப்பொழுதாவது மனந்திரும்பி, தேவனிடம் தன்னை மன்னிக்கும்படி வேண்டுகையில், அவனுடைய மனந்திரும்புதலின் பேரில் தேவன் அவனை மன்னிப்பாரேயானால், அவரை நோக்கி கூப்பிடும் இன்னொரு பாவியிடமும் தேவன் அதேபோலவே செயல்பட வேண்டியவராயிருக்கிறார். 106. புரிகிறதா, நாம் முடிவுள்ளவர்கள்; அவரோ முடிவற்றவராய் இருக்கிறார். முடிவற்றவர், முடிவற்றவர் என்பதை உங்களால் விளக்க முடியாது. இதோ அதைப்பற்றின ஒரு சிறிய புரிந்துகொள்ளுதல் என்னவென்றால் உலகம் தோன்றுவதற்கு முன்னே, பூமியில் இருக்க போகின்ற ஒவ்வொரு தெள்ளுப்பூச்சியையும், அது ஒவ்வொரு முறையும் அதன் கண்களை எப்போதுதெல்லாம் சிமிட்டுமென்றும் அவர் அறிந்திருந்தார். இப்பொழுது அது முடிவற்றவர் என்பதை பாதியளவு கூட விளக்கவில்லை. அவர் ஆதியிலிருந்து அந்தம் வரை அனைத்தையும் அறிந்திருந்தார். யாரோ ஒருவர்... நான் அதைபோன்றதொரு கருத்தை தெரிவித்தேன், அதற்கு அவர்கள், "அப்படியானால் ஏன் அவர் பாவத்தை அனுமதித்தார்?" என்று கேட்டனர். 107. அவருடைய நோக்கத்திற்காகவே பாவம் கிரியை செய்கிறது. சகல மகிமையும் தேவனுக்குள் வாசமாயிருந்தது. ஒரு பாவியும் இல்லையென்றிருந்திருக்குமானால், அவர் ஒருபோதும் இரட்சகராக இருந்திருக்க முடியாது. அவருக்குள் ஒரு இரட்சகருக்குரிய தன்மைகள் இருந்தன. அவர் இரட்சகராக இருப்பதற்கு பாவமானது வெளிப்பட வேண்டியிருந்தது. எது மிகவும் வல்லமை வாய்ந்தது, ஒரு பாவம் - ஒரு பாவி, அல்லது பாவமா அல்லது கிருபையா? நிச்சயமாக கிருபையே. எது மிகவும் வல்லமை வாய்ந்தது, ஒரு சுகவீனமா அல்லது சுகப்படுத்துபவரா? பாருங்கள், நிச்சயமாக, சுகப்படுத்துபவருக்கே சுகவீனத்தின் மீது அதிகாரம் உள்ளது. மேலும் தேவன், சுகவீனமான நபர் இருந்திருக்காவிட்டால், அவர் சுகப்படுத்துபவராக இருந்தி ருக்கவே மாட்டார். ஆகவே அவரை சுகப்படுத்துபவராக ஆக்குவதற்கு சுகவீனம் இருந்திருக்க வேண்டும். அவரை ஒரு இரட்சகராக ஆக்குவதற்கு பாவம் இருந்திருக்க வேண்டும். நிச்சயமாக. இப்போது, புறஜாதியாரின் நேரம் வந்துவிட்டது. இந்த எல்லாக் காலங்களையும் நாம் கடந்து வந்திருக்கிறோம். 108. என்னிடம் இன்னுமொரு காரியம் உள்ளது. நான் உங்கள் நேரத்தை அதிகம் எடுத்துக்கொள்கிறேன் என்று எனக்குத் தெரியும். இன்னும் ஒரு சிறிய கூற்று. சோதோம் கொமோராவின் முடிவு காலத்திற்கு சற்று முன்பு நீங்கள் கவனித்தீர்களா? இந்த அழகிய நகரம், மற்ற எல்லா நகரங்களோடுங்கூட, சோதோமின் நாட்களில் இருந்தது போலவே தாறுமாறின் இறுதி எல்லைவரை வாதிக்கப் பட்டுள்ளதை கவனிக்கிறேன். நீங்கள் செய்தித்தாள்களையும் மேலும் மற்ற காரியங்களையும் பார்க்கிறீர்களா, அது..., அந்த வாசிப்புகளில்.... அது எப்படி அதிகரித்து வருகிறதென்று?, ஒவ்வொரு வருஷமும் தாறுமாறாக்கப்படுதல் இரட்டிப்பாகி கொண்டு செல்கிறது: அது முடிவு கால அடையாளமாகும். சோதோமும் அவ்வாறாகவே இருந்தது. 109. ஆனால் சற்று அதற்கு முன்பு... இப்பொழுது, இங்கே இரண்டு தரப்பட்ட, மூன்று தரப்பட்ட ஜனங்கள் இருக்கிறார்கள். அங்கே எப்போதுமே... (பிதா, குமாரன், பரிசுத்த ஆவி போன்றதான அந்த வேதாகம எண்ணியல்), அவ்விதமான மூன்று என்கிற எண்ணியலை ஒருபோதும் தவற விடாதீர்கள். நீங்கள் அவைகளை விடாதிருந்தால் நீங்கள் சிதறிய துண்டுகளை சேர்க்கும் புதிரை ஒன்றிணைப்பது போல (jig-saw puzzle) அதுவே காட்சியை சரியாக அமையும்படி செய்யும். 110. இப்போது, அங்கே சோதோமில், பாவ அறிக்கையிடாத மோசமான பாவிக்கூட்டம் அங்கிருந்தது. லோத்தும், அவன் மனைவி மற்றும் பிள்ளைகளும் பாவ அறிக்கை செய்திருந்தனர். அங்கே தெரிந்துகொள்ளப்பட்டவனாகிய ஆபிரகாமும் இருந்தான். தேவனுடைய முன்னறிவால் தெரிந்து கொள்ளப் பட்டவர்கள் இருக்கிறர்கள் என்று நீங்கள் விசுவாசிக்கின்றீர்களா? நிச்சயம் அதை விசுவாசிப்பீர்கள். வேதம் வாசிக்கும் எவரும் அதை விசுவாசிப்பார்கள். 111. இப்போது கவனியுங்கள். முடிவு காலத்திற்கு சற்று முன்பு. அது என்னவாக இருந்தது? அக்கினி விழுவதற்கு முன், அவர்களுக்கு செய்திக்கு மேல் செய்தியும், எச்சரிப்புக்கு மேல் எச்சரிப்பையும் லோத்துவின் பிரசங்கத்தில் பெற்றார்கள். அதுதான் மேய்ப்பனான லோத்து. அந்த தேசத்தின் பாவங்கள் அவனுடைய நீதியுள்ள இருதயத்தை வாதித்தது என்று வேதாகமம் உரைக்கிறது. அவன் அவர்களுக்கு பிரசங்கித்தான். ஆனால் அது எந்த நன்மையும் செய்யவில்லை. அவர்கள் இன்று போதகருக்கு செய்வதைப் போல், அதை வீண்பேச்சாகக் கருதி அதை உதறித் தள்ளினார்கள். அவர்கள், "ஆ, அது முட்டாள்தனம்!" என்றனர். 112. ஆனால் பரலோகத்திலிருந்து மூன்று புருஷர் இறங்கி வந்தார்கள். கவனியுங்கள். அவர்களில் ஒருவர் தங்கியிருந்து ஆபிரகாமிடம் பேசினார். அவர்களில் இருவர், ஒரு நவீன பில்லி கிரஹாம் போன்று, சோதோமுக்குச் சென்று எழுப்புதலுக்காக பிரசங்கித்து அழைக்கப்பட தகுதியுள்ளவர்களை வெளியே அழைத்தனர். ஆனால் கவனியுங்கள், ஒருவர் ஆபிரகாமுடன் தங்கினார். 113. இப்போது, சற்று இங்கே காட்சியை கவனிப்போம். இப்போது, அவர்கள் சென்று விட்டனர். மேலும் அவர், "அவன் உலகத்தைச் சுதந்தரிப்பான் என்பதை கண்டு, நான் செய்யப் போகிறதை ஆபிரகாமுக்கு மறைப்பேனோ?" என்றார். மேலும் அவர் கூடாரத்தின் பக்கம் தம் முதுகை திருப்பிய வண்ணமாக இருந்தார். சாராள் கூடாரத்தில் இருந்து கொண்டு, ஒருவேளை ஏதாவதொன்றை ஆயத்தம் செய்து கொண்டும், அல்லது தைத்துக் கொண்டும் அல்லது ஏதோவொன்று கூடாரத்தில் செய்து கொண்டிருந்திருப்பாள். 114. மேலும் மனுஷ சரீரத்தில் இருந்த இந்த மனிதர், இன்னும் தேவனாக இருந்தார். ஆபிரகாம் அது தேவன்தான் என்று சொல்லி, அவரை ஏலோஹிம், மகத்தான யேகோவா என்று அழைத்தான். ஆனால் அவர் மனுஷ சரீரத்தில் இருந்து ஒரு கன்றின் இறைச்சியைப் புசித்து, பசுவின் பாலைக் குடித்து, கொஞ்சம் வெண்ணெயையும் மற்றும் சோள ரொட்டியையும் சாப்பிட்டார். அவர் மனுஷனாய் இருந்தபோதிலும் அவர் தேவனாகவே இருந்தார். ஆனால் அக்கினி விழுவதற்கு சற்று முன்பு, தேவன் அங்கே தெரிந்து கொள்ளப்பட்டவர்களுக்கு, இன்றைய சபைக்கு, அவர்களுடைய கடைசி அடையாளத்தை அவர்களுக்கு கொடுத்து, ஏதோ ஒன்றை காண்பித்துக் கொண்டிருந்தார். 115. அவர் திரும்பி, "ஆபிரகாமே," இப்படியாக, "இந்தக் குழந்தைக்காக நீ இருபத்தைந்து வருஷங்களாகக் காத்திருந்தாய். உனக்கு நூறு வயது, சாராளுக்கு தொண்ணூறு வயது ஆகிறது. ஆனால் ஒரு உற்பவ காலத்திட்டத்தில் அடுத்த மாதம் உன்னை காண வருவேன்" என்றார். 116. மேலும் சாராள், கூடாரத்துக்குள்ளே... தூதன் கூடாரத்திற்கு பின்னாக திரும்பியவாறு இருந்தார் என்று வேதாகமம் கூறுகிறது. (தூதன் என்றால் என்ன? ஒரு செய்தியாளன்.) அவர் திரும்பியவாறு இருந்தார். அவர் கூடாரத்திற்கு பின்னாக திரும்பி இருந்தார் என்று வேதாகமம் கூறியது. சாராள் கூடாரத்தில் இருந்தாள். அதை அவர் ஆபிரகாமிடம் சொன்னபோது, சாராள், (சகோதரன் பிரன்ஹாம் அமைதியாக சிரிக்கிறார்) தன் உள்ளத்திலே நகைத்தாள். அவர், "சாராள் ஏன் நகைத்தாள்?" என்றார். என்ன வகையான மனோவசியம் அது? "சாராள் ஏன் நகைத்தாள்?" அவள், "நான் நகைக்கவில்லை" என்றாள். அதற்கு அவர், "ஓ, ஆம், நீ நகைத்தாய்" என்றார். 117. அவள் பயந்தாள். அவள், "இது என்னவாகும்?" என்று வியந்தாள்... கூடாரவாசலிற்கு திரும்பியவாறு இருந்து, திரைக்குப் பின்புறமாய் அவள் திரும்பியவாறு இருந்து நகைப்பதை கண்டறியும் இவர் ஒரு மனுஷனை விட மேலானவராக இருக்க வேண்டும். அவருக்கு அது எப்படித் தெரிந்தது? அது ஒரு மனுஷனை விட மேலானவராக இருந்திருக்க வேண்டும். அது தேவன் தம்மை மனுஷ சரீரத்தில் வெளிப்படுத்துதலாகும். 118. சில நிமிடங்களில் அவர்கள் ஒரு பலி செலுத்தினார்கள். அவர் [சகோதரன் பிரன்ஹாம் ஒலிபெருக்கியில் ஊதுகிறார்] அவர்களை விட்டு மறைந்தார். அது தேவனாயிருந்தது. அது என்னவாக இருந்தது? தெரிந்து கொள்ளப்பட்ட சபை அழிவிற்கு முன்னதாக கொண்டிருந்த கடைசி அடையாளம் அதுவே. இப்போது, அதை மனதில் கொள்ளுங்கள். 119. அந்த சமாரியர், அடையாளம் அவர்களுக்கு கொடுக்கப்பட்டவுடனே, அவர்கள் வந்து, அவர் சொன்னதை கேட்டு, அவரை விசுவாசித்தார்கள். வருஷங்கள் கடந்தன. புறஜாதி சபை உண்டானது. அது இரண்டாயிரம் வருஷங்களாக சபைகள், மற்றும் எழுப்புதல்கள், இன்னும் பலவற்றைக் கொண்டிருந்தது, அது அற்புதமாக இருந்தது. 120. நாற்பது வருஷங்களுக்கு முன்பு திருமதி மெக்பெர்சன் (Mrs. McPherson) மற்றும் அநேக பரிசுத்தவான்கள் வாழ்ந்த அந்நாளில், பரிசுத்த ஆவி சபையின் மீது ஊற்றப்பட்டபோது, அந்நிய பாஷைகள், வியாக்கியானம் செய்தல், மகத்தான சுகமளிக்கும் ஆராதனைகள், சபைகளில் தூதர்கள் பாடுதல் போன்ற மகத்தான வரங்கள் திரும்ப அளிக்கப்பட தொடங்கின. அது மகத்துவமானதாக இருந்தது. ஆனால் இப்பொழுதோ நாம் சுமார் ஐம்பது வருஷங்களைக் கடந்து, கடைசி காலத்தில் இருக்கிறோம் 121. இப்போது, அவர் நேற்றும், இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறாரா? அவர் இருதயத்தின் இரகசியத்தை அறிகிறாரா? அவர் இன்னும் தம்முடைய வார்த்தையைக் காத்துக்கொள்ளப் போகிறாரா? மேலும் தேவன் இயேசுவின் மூலமாய் அந்த அடையாளத்தைக் கொண்டு தம்மை மேசியாவாக வெளிப்படுத்தியிருப்பாரானால், அவர் இன்று இந்த சபைக்கு அதேவிதமாக தம்மை வெளிப்படுத்தாமல், அவர் நமக்கு அளிக்காத ஒன்றை அவர்களுக்கு அளித்திருந்தாரெனில், அவர் அநீதியுள்ளவராக காணப்படுவார். அவர் யூதர்களுக்கும், சமாரியர்களுக்கும் அதைச் செய்தார் என்றால், தம்முடைய பரிசுத்தத்தினாலும், தம்முடைய நீதியினாலும் இக்காலத்தின் முடிவில் தம்மை வெளிப்படுத்த அவர் கடமைப் பட்டவராயிருக்கிறார். ஏனெனில், நாம் இந்த கிறிஸ்தவ யுகம் முடியப்போகும் நாளிலே ஜீவித்துக் கொண்டிருக்கிறோம். நாம் ஜெபம் செய்வோம். 122. கர்த்தாவே, உம்முடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாய் சகலத்தையும் உண்டாக்கினவரே, வானத்திற்கும் பூமிக்கும் மகத்தான தேவனே, கர்த்தாவே, எங்கள் பாவங்களையும் எங்கள் குற்றங் குறைகளையும் எங்களுக்கு மன்னியும். பாவத்தை குறித்து நாங்கள் பேசும் பொழுது கர்த்தாவே, ஒரே ஒரு பாவம் மாத்திரமே உண்டென்றும், அது அவிசுவாசமாகிய பாவம் என்றும் நீர் அறிந்திருக்கிறீர். "விசுவாசியாதவனோ ஆக்கினைத் தீர்ப்புக்குட்பட்டாயிற்று." அவன் எப்படிப்பட்ட நீதிமானாக இருந்தாலும், அல்லது அவன் எவ்வளவு செய்திருந்தாலும், அல்லது நாம் என்ன செய்திருந்தாலும், அது எவ்வித வித்தியாசத்தையும் உண்டாக்குவதில்லை. நாம் விசுவாசிக்க வேண்டும். 123. தேவனே, உயிர்த்தெழுந்த இயேசுவின் வல்லமையை நீர் எங்கள் இருதயங்களில் பதியவைக்க வேண்டுமென நான் ஜெபிக்கிறேன். ஒரு வரத்தை நோக்கிப்பார்க்கின்ற ஜனங்களாக இராதபடிக்கும், இன்றிரவு சகோதரர் டுப்ளெசிஸ் எங்களுக்கு எடுத்துரைத்த விதமாக, செய்தியைக் கொண்டுவரும் அந்த நபருக்கும் அதற்கும் ஏதோ சம்பந்தமுண்டு என்று நினைக்கிறவர்களாயும் இராதபடிக்கும் அருளும், அந்நபர் தேவனுக்கும் அவருடைய சித்தத்திற்கும் கீழ்ப்படிவதைத் தவிர வேறு எந்த சம்பந்தமும் இல்லை; யாராவது அதை செய்தாக வேண்டும். எங்களில் ஒருவரும் பாத்திரவானல்ல. நாங்கள் பாத்திரவான்களல்ல என்பதை அறிக்கையிடுகிறோம். ஆனால் உமது கிருபைதான் அதை வாக்குத்தத்தமளித்திருக்கிறது. உமது வார்த்தைகள் உண்மையானவைகளே. 124. கர்த்தாவே, ஒரு சிறுவனாக எய்மி செம்பிள் மெக்பெர்சனை (Aimee Semple McPherson) குறித்து வாசித்ததை என்னால் நினைத்து பார்க்க முடிகிறது. மேலும் சில சமயங்களில் நாம் பத்திரிக்கைகளில் காணும் விமர்சனம் என்னவென்றால், அவள் ஜனங்களை சுகப்படுத்துவதாக உரிமைகோருகிறாள் என்று அவர்கள் கூறுகின்றனர். அது உண்மைக்கு மாறானது என்று நாம் எப்படி கண்டுகொண்டோம். மேலும் நாம் வாசிக்கையில், டாக்டர் பிரைஸ் (Dr Price), எஃப். எஃப் பாஸ்வர்த் (F. F. Bosworth) மற்றும் இந்நாளுக்கு முன் ஜீவித்த மகத்தான பரிசுத்தவான்களைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம். சபை அதன் இரட்சகரின் பிரசன்னத்தில் வெளிப்பாட்டை முன்பு பெற்றதை விட மகத்தான வழிகளில் பெற்றுக் கொள்கின்ற நாள் வருகிறதை, அவர்கள் அனைவரும் நோக்கிப் பார்த்து தீர்க்கதரிசனம் உரைத்தனர். 125. கர்த்தாவே, எனக்குச் செவிகொடும், எனது தாழ்மையான கூப்பிடுதலுக்குப் பதிலளித்தருளும். கர்த்தாவே, நான் உம்மிடத்தில் ஜெபிக்கையில், இங்கு இருக்கின்றதான இந்த புருஷரும், ஸ்திரீகளும், எங்காயினும், யாரெல்லாம் கூடுகிறார்களோ, இது ஏதோ ஒரு சாதாரண மனுஷன் என்று அவர்கள் நினைத்துக்கொள்ளாமல், ஆனால் இது யூதருக்கும் சமாரியர்களுக்கும் அவர் செய்ததைப் போலவே, இந்த புறஜாதி காலத்திற்கும் இயேசு வெளிப்படுத்தப்படுவார் என்ற தேவனுடைய வாக்குத்தத்தமாக இருக்கிறது என்பதை உணரும்படி செய்தருளும். அவரை நாம் ராஜாதிபத்தியர் என்று கூறியுள்ளோம். மேலும் அவர் கிரியை செய்யும்போது, அவர் ஒவ்வொரு முறையும் அதேவிதமாக கிரியை செய்ய வேண்டியவராய் இருக்கிறார். கர்த்தாவே, முடிவுள்ளவர்களாக இருப்பதால், நாங்கள் வாக்குறுதி அளித்தும் - அதன்பின் அதை நிறைவேற்ற முடியாமற் போகலாம் என்பதை நாங்கள் உணர்கிறோம். ஆனால் தேவனாகிய கர்த்தாவே, நீர் தேவனாயிருக்கிறபடியால், வாக்குத்தத்தம் செய்து அதை நிறைவேற்றாமல் இருக்க முடியாது, நீர் முடிவற்றவர், நீர் சகலத்தையும் அறிவீர். 126. உமது ஆவி இந்த ஏஞ்சலஸ் ஆலயத்திலுள்ள (Angelus Temple) ஜனங்களையும், வரபோகிறவர்களையும் மிகுதியாக அபிஷேகம் செய்யவும், பரிசுத்த ஆவியின் பொழிந்தருளுதல் இவ்விடத்தைத் தாக்கி, பண்டைய பாணியிலான எழுப்புதல் உண்டாகி; மெதடிஸ்டுகள் பாப்டிஸ்டுகள், பிரஸ்பிடேரியன்கள் மற்றும் ஜீவனுள்ள தேவனுடைய சகல சபைகளும் அனுகூலம் பெறவேண்டுமென நாங்கள் ஜெபிக்கிறோம். இந்த மேற்கு கடற்கரையில் ஒரு எழுப்புதல் வந்து, உள்ளவாறே அது கர்த்தராகிய இயேசுவிடம் பல்லாயிரக்கணக்கானோரை வரும்படி செய்யட்டும். 127. கர்த்தாவே, இந்த ஏஞ்சலஸ் ஆலயத்தில், வரும் வாரத்திலும், மேலும் வரவிருக்கும் ஆராதனைகளிலும், நாங்கள் இந்த மகத்தான பங்கை பெற எங்களுக்கு அருள் புரியும். இவைகளை இயேசுவின் நாமத்தில், அவர் நிமித்தம் கேட்கிறோம். ஆமென். 128. இப்போது, கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. அதற்கு முன்பு எத்தனை பேர்..? தேவனுடைய கிரியைகள் என்ன? 2